தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
பாலிவுட்டின் காதல் ஜோடிகளான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே திருமணம் இத்தாலி நாட்டில் உள்ள லேக் கோமோ என்ற இடத்தில் சிறப்பாக நடைபெற்றது. அந்தத் திருமணத்திற்கு வருகை புரிந்த அனைவருக்கும் செல்போன் எடுத்து வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது. அதனால், ரன்வீர், தீபிகா ஆகியோரின் எந்த ஒரு திருமணப் புகைப்படமும் இணையங்களில் கூட வெளியாகவில்லை.
இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகாதா என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் காத்திருந்தனர். இதுதொடர்பாக ஏராளமான மீம்ஸ்கள் கூட வெளியானது. இந்நிலையில், ரன்வீர் - தீபிகா திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
கொங்கனி மற்றும் பஞ்சாபி முறையில் இருவரின் திருமணங்கள் நடந்த விதமாக இரண்டு விதமான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.