இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
படத்தின் பெயர்தான் 'ஜீரோ'. ஆனால், வெளியீட்டிற்கு முன்பே கோடியில் சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது. ஷாரூக்கான் குள்ளமான மனிதராக நடிக்கும் 'ஜீரோ' படத்தின் டிரைலர் ஒரு வாரம் முன்பாக யு டியூப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே அதிகமான பார்வைகள், லைக்குகள் என சாதனைகளைப் படைத்தது.
நான்கு நாட்களிலேயே 10 கோடி பார்வைகளைப் பெற்று 'ஜீரோ' டிரைலர் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இப்படத்தின் டிரைலர் அனைத்து இணைய சமூக வலைத்தளங்களிலும் அந்த சாதனையைப் புரிந்துள்ளது. யு டியூபில் மட்டும் தற்போது 8 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும், பேஸ்புக்கில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும் பெற்றுள்ளது. மேலும், யு டியூபில் இதுவரை 17 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது.
இந்திய அளவில் அதிகப் பார்வைகள், லைக்குகள் பெற்ற முதல் படம் என்ற பெருமையை 'ஜீரோ' பெற்றுள்ளது. படத்தின் டிரைலரே இத்தனை கோடிகளைக் கடந்துள்ளது என்றால் படம் வெளியானபின் அது வசூலில் பல கோடி சாதனைகளைப் படைக்கும் என பாலிவுட் வட்டாரம் எதிர்பார்க்கிறது.