தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அமிதாப்பச்சன், ஆமீர்கான், பாத்திமா சனா ஷேக், காத்ரினா கைப் மற்றும் பலர் நடித்த தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் படம் நேற்று உலகம் முழுவதும் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. படத்திற்கு எதிர்பார்த்த விமர்சனம் கிடைக்கவில்லை. 300 கோடி ரூபாய் செலவில் எந்தவிதமான ஈர்ப்பும் இல்லாத ஒரு சாதாரண படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பதுதான் பலரின் கருத்தாக உள்ளது.
இருந்தாலும் படம் வசூல் ரீதியில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. இந்த வருடத்தில் வெளிவந்த ஹிந்தித் திரைப்படங்களில் முதல் நாள் வசூலில் சுமார் 52 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
சஞ்சு படம் 34 கோடிகளையும், ரேஸ் 3 படம் 29 கோடிகளையும், கோல்டு படம் 25 கோடிகளையும், பாகி 2 25 கோடிகளையும் வசூலித்து அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. இவ்வளவு தியேட்டர்களில் வெளியானதால் தான் இந்தப் படம் வசூலில் சாதனை புரிந்துள்ளது என்கிறார்கள். வரும் நாட்களில் படத்தின் வசூல் எதிர்பார்த்தபடி இல்லாமல் மிகவும் குறையும் என்றும் பாலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் சர்கார் படம் வெளிவந்திருந்தாலும் தமிழில் டப்பிங் ஆகி வெளியாகியுள்ள தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் படம் மாநகரங்களில் நன்றாக ஓடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.