தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சர்கார் படத்தின் டீசர் வெளியாகி ஒரே நாளில் பல சாதனைகளைப் படைத்தது. ஓர் இரவுக்குள் 1 கோடி பார்வைகள், 10 லட்சம் லைக்குகள் என புதிய உலக சாதனையை படைத்தது. அந்தப் படத்தின் சாதனையை முறியடிக்க சில காலம் ஆகும் எனக் கருதப்பட்டது.
ஆனால், பத்து நாட்களுக்குள் அந்த சாதனை முறியடிக்கப்பட்டுவிட்டது. ஷாரூக்கான், அனுஷ்கா சர்மா, காத்ரினா கைப் மற்றும் பலர் நடித்து வெளிவர உள்ள ஜீரோ படத்தின் டிரைலர் இரண்டு நாட்களுக்கு முன்பு யு டியூபில் வெளியிடப்பட்டது. வெளியான 24 மணி நேரங்களில் அந்த டிரைலர் புதிய இந்தியத் திரைப்பட சாதனையைப் படைத்தது.
4 கோடி பார்வைகளையும் 10 லட்சம் லைக்குகளையும் பெற்று புதிய சாதனையைப் படைத்தது. தற்போது அந்த டிரைலர் 6 கோடியே 40 லட்சம் பார்வைகளையும், 14 லட்சம் லைக்குகளையும் பெற்று புதிய சாதனையைப் படைத்துளளது.
சர்கார் டீசர் பெற்ற 13 லட்சம் லைக்குகளை ஜீரோ டிரைலர் கடந்துவிட்டது.