தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மீ டூ விவகாரம் வெடித்து கிளம்பிய பின் நடிகர் ராதாரவி பல மேடைகளில் வேடிக்கையாக சொல்லும் விஷயம் நடிகர்கள் இனி நடிகைகளுடன் நெருக்கமாக நடிக்கும் காட்சிகளில் நடிக்கும் முன்னதாக, அவர்களிடம் முன் கூட்டியே இப்படி இப்படி நடிக்கப்போகிறோம் என எழுதி வாங்கிக் கொள்ளுங்கள் என கூறி வருகிறார்.
பேசுவதற்கு நன்றாக இருக்கும்.. இது சாத்தியமா என தோன்றலாம். ஆனால் பாலிவுட்டில் தலிப் தாஹில் என்கிற சீனியர் நடிகர் இதை செயல்படுத்தியே விட்டார். தற்போது தான் நடித்துவரும் ஹோஸ்டேஜஸ் என்கிற வெப் சீரியஸில் கற்பழிப்பு காட்சி ஒன்றில் தன்னுடன் நடிக்கும் நடிகையிடம், நடிப்பதற்கு முன் அது குறித்து விளக்கி ஒப்புதல் கடிதம் எழுதி வாங்கியுள்ளார். அதுவும் போதாதென்று அந்த நடிகை தனது சம்மதத்தை தெரிவிப்பதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.