'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான, எம்எஸ் தோனி படத்தில், அவரது தோழியாக நடித்து, பிரபலமானவர், திஷா படானி. அறிமுகமாகி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டாலும், விரல் விட்டு எண்ணக் கூடிய படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
ஆனால், திரை நட்சத்திரங்களின் குடும்ப விழாக்கள், சினிமா தொடர்பான நிகழ்ச்சிகள், பார்ட்டிகளில் தவறாமல் ஆஜராகி விடுகிறார். இந்த நிகழ்ச்சிகளுக்கு எல்லாம், அசத்தலான உடையணிந்து வந்து, பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும், தன் மீது திருப்பி விடுகிறார்.
இதனால், கடுப்பான சக நடிகையர், இன்னும் உருப்படியாக, ஒரு படத்தில் கூட, ஹீரோயினாக நடிக்கவில்லை; அதற்குள் இவ்வளவு அலட்டலா என, புலம்புகின்றனர்.