'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல பாலிவுட் நடிகை சோனம் அகுஜா. தற்போது சல்மான்கானுடன் ஜோயா பேக்டர் படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத் தளங்களில் பிசியாக இயங்கும் பாலிவுட் நடிகைகளில் இவரும் ஒருவர். சமீபதில் தனது டுவிட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் "வீட்டை விட்டு வெளியில் வரவே அச்சமாக இருக்கிறது. பணி செய்யும் இடத்திற்கு காரில் செல்ல 2 மணி நேரமாகிறது. ரோடு சரியில்லை, சுற்றுப்புறசூழல் சரியில்லை" என்று புலம்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த ஒரு ரசிகர் "ஒரு லிட்டருக்கு 5 கிலோ மீட்டர் ஓடம் சொகுசு கார், வீட்டுக்கு பத்து ஏசி பயன்படுத்தும் உங்களை போன்ற ஆடம்பர வாசிகளால்தான் அத்தனை பிரச்சினையும் ஏற்படுகிறது" என்று கூறியிருந்தார்.
இதில் கோபம் அடைந்த சோனம் டுவிட்டரை விட்டு வெளியேறி விட்டார் இது குறித்து அவர் "சில காலங்களுக்கு ரசிகர்களுடன் உரையாடுவது இல்லை என்ற முடிவை எடுத்துள்ளேன். டுவிட்டர் மிக எதிர்மறையாக உள்ளது. அனைவருக்கும் அமைதியும், அன்பும் ஏற்படட்டும் " என தனது டுவிட்டர் செய்தியில் சோனம் தெரிவித்துள்ளார்.