இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்து, பின்னர் பாலிவுட்டிற்கு சென்று அங்கும் நம்பர் 1 நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. துபாயில் திருமணம் ஒன்றுக்கு சென்றிருந்த ஸ்ரீதேவி, ஹோட்டல் அறையின் குளியலறையில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து மரணம் அடைந்தார்.
ஸ்ரீதேவியின் மரணம் இந்திய திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்தது. இந்நிலையில் ஸ்ரீதேவிக்கு பெருமை சேர்க்கும் விதமாக சுவிட்சர்லாந்தில் சிலை அமைக்கப்பட இருக்கிறது. இது அந்நாட்டு அரசால் அமைக்கப்பட இருக்கிறது.
ஸ்ரீதேவி நடித்த சாந்தினி படம் சுவிட்சர்லாந்தில் அதிகம் படமாக்கப்பட்டது. இந்தப்படத்திற்கு பிறகு இந்தியாவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஸ்ரீதேவியை கவுரவிக்க, அந்நாட்டில் பெர்ன் நகரில் சிலை அமைக்கப்பட இருக்கிறது.
இதற்கு முன்னர் 2016-ம் ஆண்டு தயாரிப்பாளர் யாஸ் சோப்ராவின் சிலையும் சுவிட்சர்லாந்தில் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.