அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
அனுஷ்கா சர்மா, வருண் தவான் நடித்துள்ள படம் சுய் தாகா. இது ஏழை நெசவாளர்கள் பற்றிய கதை. தேசிய விருது பெற்ற இயக்குனர் சரத் கட்டாரியா இயக்கி உள்ளார். இந்தப் படம் கைத்தறி துணிகளையும், நெசவாளர்களையும் காப்பாற்றும் நோக்கத்திலும் அதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கதிலும் உருவாகி உள்ளது.
இதன் படப்பிடிப்புகள் வட இந்தியாவில் நெசவாளர்கள் அதிகம் வாழும் குக் கிராமங்களில் நடந்தது. அங்கு முன்னணி நட்சத்திரங்கள் தங்கும் அளவிற்கான ஓட்டல்கள் கிடையாது. இதனால் சாதாரண மக்கள் வசிக்கும் வீடுகளிலேயே தங்கி அனுஷ்கா சர்மாவும், வருண் தவானும் நடித்துக் கொடுத்துள்ளனர்.
"சுய் தாகா படப்பிடிப்பின்போது எளிய மனிதர்களின் வீடுகளில் தங்கி இருந்தேன். அவர்களின் அன்பு, அவர்கள் அளித்த எளிமையான, சுவையான உணவு வாழ்நாளில் மறக்க முடியாதது. இனி அப்படி ஒரு அனுபவம் கிடைக்குமா என்று தெரியவில்லை. அங்கு தங்கிய பிறகு எளிய வாழ்க்கையின் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. எளிய ஆடைகள் அணியவும் பழகிக் கொண்டிருக்கிறேன்" என்கிறார் அனுஷ்கா சர்மா.