டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் இயக்குனராக மாறி மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் வலுவான ஸ்டைலிஷான வில்லன் கதாபாத்திரம் ஒன்று இருக்கிறது. அதற்காக மலையாள திரையுலகிற்கு புதிதான ஒரு முகம் வேண்டும் என நினைத்தே பாலிவுட்டில் இருந்து நடிகர் விவேக் ஓபராயை அழைத்து வந்துள்ளார் பிருத்விராஜ்.
மலையாள படங்களில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு வந்த விவேக் ஓபராய், அது மோகன்லால் படத்தின் மூலம் தான் நடக்க வேண்டும் என உறுதியாக இருந்தாராம். அது நிறைவேறியதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் மனிதர். இன்னொரு ஆச்சர்யமான விஷயம், விவேக் ஓபராய் பாலிவுட்டில் ராம்கோபால் வர்மா டைரக்சனில் முதன்முதலில் ஹீரோவாக அறிமுகமான 'கம்பெனி' படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் மோகன்லாலும் நடித்திருந்தார். தற்போது 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.