ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஹிந்தியில் 2007ல் சஞ்சய் தத் நடிப்பில் வெளியான டமால் படம் ஹிட்டானது. அதையடுத்து 2011ல் உருவான டபுள் டமால் படத்திலும் சஞ்சய் தத்தே ஹீரோவாக நடித்தார். ஆனால் தற்போது இதன் மூன்றாம் பாகமாக உருவாகி வரும் டோட்டல் டமால் படத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இது திரையுலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.. இந்தநிலையில் இந்தப்படத்தில் கெஸ்ட் ரோல் ஒன்றில் நடிக்குமாறு சஞ்சய தத்திடம் கோரிக்கை வைத்தாராம் இயக்குனர் இந்திரகுமார்.. ஆனால் தன்னிடம் தேதிகள் இல்லையென கூறி நாசூக்காக மறுத்துவிட்டாராம் சஞ்சய் தத்.
உண்மையில் தன்னையே மூன்றாம் பாகத்திலும் ஹீரோவாக நடிக்க அழைக்காமல் அஜய் தேவ்கனை ஒப்பந்தம் செய்தது சஞ்சய் தத்தை கோபமடைய வைத்துவிட்டதாம். அதனால் தான் இயக்குனர் நன்கு பழகிய நண்பர் என்றாலும் கூட, மூன்றாம் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் திட்டவட்டமாக நடிக்க மறுத்துவிட்டார் என சொல்லப்படுகிறது.