பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விளையாட்டை மையமாக வைத்து படம் எடுப்பது தான் சமீபத்திய பாலிவுட் டிரண்ட். கிரிக்கெட், குத்துச்சண்டை, ஓட்டப்பந்தையம், டென்னிஸ் வரிசையில் அடுத்து கபடியை வைத்தும் படம் தயாராக இருக்கிறது.
படத்தின் பெயர் பங்கா. பிரபல பாலிவுட் இயக்குனர் அஸ்வினி அய்யர் திவாரி இயக்குகிறார். தற்போது ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட மணிகர்னிகா படத்தில் நடித்து வரும் கங்கனா, அடுத்ததாக கபடி வீராங்கனையாக நடிக்கிறார். கடந்த ஒரு மாதமாக இதற்காக கபடி பயிற்சி எடுத்து வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
அஸ்வினி திவாரி சொன்ன கதை மிகவும் பிடித்திருந்தது. அவரது முந்தைய படங்களையும் பார்த்திருக்கிறேன். மிகவும் சவால் நிறைந்த ஒரு கேரக்டர். அதனால் உடனே ஒப்புக் கொண்டேன். தற்போது, கபடி பயிற்சி எடுத்து வருகிறேன். நான் முழுமையாக தயாரானதும் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார் கங்கனா.