ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
முன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தில் அறிமுகமானவர். மும்பை நடிகையான இவர், அந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலும் பின்னணி பாடியிருந்தார்.
அதன்பிறகு தமிழில் நடிக்கவில்லை என்ற போதும் ஹிந்தி படங்களில் நடித்து பிரபலமான அவர், ஹாலிவுட்டிலும் கொடி நாட்டினார். அவர் நடித்த குவான்டிகா என்ற சீரியல் அவரை உலகமெல்லாம் கொண்டு சேர்த்தது.
இந்நிலையில், 36 வயதான பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் என்ற ஹாலிவுட் பாடகரை காதலித்து வந்தார். இந்த செய்தி மீடியாக்களில் வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று மும்பையில் பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா மஞ்சள் நிற உடையிலும், நிக் ஜோனஸ் வெள்ளை நிற இந்திய பாரம்பரிய உடையிலும் காணப்பட்டார்.