பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
இப்போது வாழ்க்கை வரலாற்று படங்கள் தான் ஹிந்தியில் டிரண்டிங். மேரிகோம், மில்காசிங், சச்சின், டோனி, அசாருதீன் என வரிசையாக வரலாற்று படங்கள் வந்து வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன், டென்னிஸ் வீராங்கணை சானியா, சாய்னா ஆகியோரின் வாழ்க்கை படமாகி வருகிறது. தெலுங்கில் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு தயாராகிறது. தமிழில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை தயாராகிறது.
இந்த வரிசையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யாவின் வாழ்க்கையும் ஜலா கோரக்பூர் என்ற பெயரில் படமாகி வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் யோகி, கோரக்பூர் கோவில் பின்னணியில் முதுகு காட்டி நிற்கிறார். அவரின் கையில் துப்பாக்கி உள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இந்தப் படம் முதல்வர் யோகியையும், இந்துக்களின் புண்ணிய தலமான கோரக்பூரின் நற்பெயரையும் கெடுக்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது என்று லக்னோவில் உள்ள ஹசரத்கன்சி போலீசில் பா.ஜ.க பிரமுகர் ஐ.பி.சிங் புகார் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து படத்தின் இயக்குனர் வினோத் திவாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.