ஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |
விஜய்யின் தமிழன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானாலும் பாலிவுட்டில் தான் வெற்றிக்கொடி நாட்டினார் ப்ரியங்கா சோப்ரா. தற்போது பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட்டிலும் கால்பதித்து உலகம் முழுக்க பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.
டுவிட்டர், இன்ஸ்டாராகிராம் போன்றவற்றில் சுறுசுறுப்பாக செயல்படுவர் ப்ரியங்கா சோப்ரா. அந்தவகையில் இன்ஸ்டாராகிராமில் ப்ரியங்கா நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறார். அவரை 2.5 கோடி பேர் பின்தொடருகின்றனர். பாலிவுட்டின் கான் நடிகர்களையே பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார்.
இவருக்கு அடுத்தப்படியாக தீபிகா படுகோனே உள்ளார். அவரும் 2.5 கோடி பாலோயர்களை பெற்றுள்ளார்.
இவர்களை தொடர்ந்து சல்மான்கானை 1.73 கோடி பேரும், ஷாரூக்கானை 1.33 கோடி பேரும், அமிதாப் பச்சனை 95 லட்சம் பேரும் பின் தொடருகின்றனர்.
நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை இன்ஸ்டாராகிராமில் 1.35 கோடி பேர் பின் தொடருகின்றனர்.