தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'பிடித்தாலும் பிடித்தார், புளியங் கொம்பாக பிடித்து விட்டார்' என, பிரியங்கா சோப்ராவை பார்த்து, பாலிவுட்டின் சக நடிகையர், வயிற்றெரிச்சலுடன் புலம்புகின்றனர்.
ஹாலிவுட் படங்களில் நடிக்கச் சென்ற பிரியங்கா, அமெரிக்காவின் பிரபல பாடகர், நிக் ஜோனசின் காதல் பார்வையில் விழுந்தார். இருவரும் ஜோடி போட்டு, வெளிநாடுகளில் வலம் வந்தாலும், இந்தியாவுக்கு வரும்போதெல்லாம்,'காதலும் இல்லை; கத்திரிக்காயும் இல்லை' என கூறிவந்தார், பிரியங்கா.
ஆனால், சமீபத்தில், தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷின் திருமண நிச்சயதார்த்த விழாவுக்கு, காதலர் நிக்குடன், ஜோடி போட்டு வந்தார், பிரியங்கா. இதன்மூலம், நிக் ஜோனசை காதலிப்பதை, அழுத்தம் திருத்தமாக, பாலிவுட்டுக்கு கூறி விட்டார், பிரியங்கா. சர்வதேச அளவில் பிரபலமான ஒரு பாடகரை, பிரியங்கா காதலிப்பது, சக நடிகையருக்கு, சற்று பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில், ஒரு சுவாரசியமான தகவலும் உண்டு; பிரியங்காவுக்கு, 35 வயதாகிறது. அவரது காதலருக்கு, 25 வயது தான்.