பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள், ஜான்வி கபூர் நடித்த முதல் படமான, தடக், கடந்த வாரம், ரிலீசானது. இதில், இஷாந்த் கட்டார் ஹீரோவாக நடித்திருந்தார். ஜான்வியை விட, போனி கபூரும், அவரது குடும்பத்தினரும் தான், இந்த படத்தை ரொம்பவே எதிர்பார்த்தனர்.
ஆனாலும், இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்களே வந்தன. ஜான்வியின் நடிப்புக்கும், 'ஆஹா, ஓஹோ' என்ற பாராட்டு எதுவும் இல்லை. ஆனாலும், தைரியமாக இருக்கிறார், ஜான்வி.
'மராத்தியில் வெளியான, சைரத் படத்தின் ரீமேக் தான், தடக். சைரத் படத்தை, நானும், அம்மாவும், ஒன்றாக தியேட்டரில் பார்த்தோம். அப்போது, இதுபோன்ற படத்தில் தான், நீ நடிக்க வேண்டும் என, அம்மா எனக்கு அறிவுரை வழங்கினார். இந்த படத்துக்கு, எப்படி விமர்சனங்கள் வந்தாலும், அதில் நடித்தது, ஒரு மன நிம்மதியை எனக்கு தருகிறது' என்கிறார், ஜான்வி.