‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
காவலன் படத்தில் நடிகர் வடிவேலு கண்ணதாசா, ஜேசுதாஸா என பெயர்கள் தெரியாமல் குழம்புவார் அல்லவா.. அதுபோல ஒரு காமெடி நிகழ்வில் சமீபத்தில் சிக்கினார் பாலிவுட் பாட்ஷாவான அமிதாப் பச்சன். விஷயம் இதுதான்.. தற்போது பிரம்மாஸ்திரா என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அமிதாப். நாயகன் நாயகியாக ரன்பீர் கபூர், அலியா பட் ஆகியோர் நடிக்கின்றனர்.
இவர்களுடன் ரிகர்சலின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட அமிதாப், பிரம்மாஸ்திரா படத்திற்காக ரன்வீர், அலியா எல்லோரும் பிராக்டீஸ் பண்ணுகிறார்கள்.. என்னைத்தவிர.. நான் என் பற்களை துலக்க தயாராகிறேன்" என குறிப்பிட்டிருந்தார். அதாவது ரன்பீருக்கு பதிலாக ரன்வீர் என தவறாக குறிப்பிட்டிருந்தார் பின் கொஞ்ச நேரத்திலேயே அதை உணர்ந்து மாற்றியும் விட்டார்.