'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். ஸ்ரீதேவி உயிரோடு இருந்தபோதே தடக் என்ற ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ஜான்வி. இஷான் கட்டார் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை கரண் ஜோகர் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதற்கு முன்பே மகளுக்கு தேவையான நடிப்பு பயிற்சி கொடுத்திருந்தார் ஸ்ரீதேவி. தடக் படம் ஜூலை 20ந் தேதி ரிலீஸாக உள்ளது.
ஜான்விகபூரின் நடிப்பு குறித்து கரண் ஜோகர் கூறுகையில், அம்மாவின் நடிப்பை அப்படியே தனது கண்களில் பிரதிபலித்துள்ளார் ஜான்வி. அதனால் இந்த படம் வெளியாகும்போது சினிமா உலகின் மொத்த கண்களும் அவர் மீது தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.