மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சமீபத்தில், பிரான்சின், கேன்ஸ் நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில், ஹாலிவுட் பிரபலங்களின் கவனத்தை ஈர்த்தவர்களில், பாலிவுட் நடிகை சோனம் கபூருக்கு முக்கிய இடம் உண்டு. சோனம், சமீபத்தில் தான், தொழில் அதிபர், ஆனந்த் அஹூஜாவை மணம் முடித்தார்.
அடுத்த சில நாட்களிலேயே கேன்ஸ் திரைப் பட விழாவுக்கு சென்று விட்டார். விழாவில், சோனம் கபூர் அணிந்திருந்த உடைகளை விட, அவரது கைகளில் போடப்பட்டிருந்த மெஹந்தியே, அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.
திருமணத்துக்காக போட்டிருந்த, மணப் பெண்ணுக்கான மெஹந்தி கலையாத நிலையிலேயே, விழாவில் பங்கேற்றதால், வெளிநாட்டு நடிகையர் அனைவரும்,'இது என்ன... வித்தியாசமாகவும், அழகாகவும் இருக்கிறதே; அசத்தீட்டீங்க' என, சோனம் கபூரை பாராட்டி தள்ளி விட்டனர்.
தான் அணிந்திருந்த உடைகளுக்கு தான் பாராட்டு கிடைக்கும் என நினைத்திருந்த சோனம், மெஹந்திக்கு கிடைத்த பாராட்டால், மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்று விட்டார்.