பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை பாலிவுட்டில் "சஞ்சு" என்ற பெயரில் சினிமாவாக உருவாகி உள்ளது. சஞ்சய் தத்தாக ரன்பீர் கபூர் நடித்திருக்கிறார். இவருடன் சோனம் கபூர், அனுஷ்கா சர்மா, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சஞ்சய் தத்தின் நண்பரும், இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி இயக்கி உள்ளார்.
இப்படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டது. 1.25 நிமிடங்கள் ஓடும் இந்த டீஸரில், சஞ்சய்யின் இளமை காலம் தொட்டு அவர் சிறை சென்று திரும்பியது வரை பல்வேறு காலக்கட்ட வாழ்க்கை பரிமாணங்கள் இடம்பெற்றுள்ளன.
ரன்பீர், சஞ்சய் தத்தாகவே மாறியிருக்கிறார். முகத்தோற்றம், சஞ்சய்யின் உடல் அசைவு என அப்படியே அவரை பிரதிபலித்திருக்கிறார். இந்த டீஸர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ரன்பீர், சஞ்சய்யாகவே வாழ்ந்திருக்கிறார் என பலரும் பாராட்டி வருகின்றனர். டீஸர் வெளியான ஒரு மணிநேரத்தில் 3.60 லட்சத்திற்கும் அதிகமானபேர் பார்த்துள்ளனர். 1.17 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.