அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
என்.சந்திரா இயக்கத்தில் லட்சுமி காந்த் பியாரிலால் இசையமைப்பில் ஜாவேத் அக்தர் எழுதி அல்கா யாக்னிக் பாடிய 'தேசாப்' படப் பாடலான 'ஏக் தோ தீன்' பாடல் மிகப் பெரும் சூப்பர் ஹிட்டான பாடல். 1988-ம் ஆண்டில் வெளிவந்த அந்தப் பாடலைக் கேட்டு ஆடாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு 'கிரேஸ்' ஆக ஆடி ரசிகர்களைக் கவர்ந்தவர் அப்படத்தின் நாயகி மாதுரி தீட்சித்.
அந்த 'ஏக் தோ தீன்' பாடலை மறுபடியும் ரீமிக்ஸ் செய்து 'பாகி 2' படத்திற்காக உருவாக்கியிருக்கிறார்கள். அப்பாடலின் குறு வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. மாதுரி தீட்சித் ஆடிய நடனத்தில் ஒரு பங்கு கூட இந்தப் பாடலில் ஆடியுள்ள ஜாக்குலின் பெர்ணான்டஸ் ஆடவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். மேலும் ஒரு அற்புதமான பாடலை இப்படி சொதப்பி விட்டார்கள் என பலரும் கூறியிருக்கிறார்கள்.
முத்தாய்ப்பாக 'தேசாப்' படத்தை இயக்கிய என். சந்திரா, ரீமிக்ஸ் பாடல் 'எந்த வித ஈர்ப்பும் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.