தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
“மாதவிடாய்” பிரச்னையின் போது பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை குறைந்த விலையில் தயாரித்து கொடுத்த தமிழரான அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு, அதில் முருகானந்தம் ரோலில் அக்ஷ்ய் குமார் நடிப்பில் வெளியாகி உள்ள படம் பேட் மேன். அக்ஷ்ய் உடன் ராதிகா ஆப்தே, சோனம் கபூர் முதன்மை ரோலில் நடிக்க, பால்கி இயக்கி உள்ளார்.
இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்தியா முழுக்க 2750 தியேட்டர்களில் வெளியான இப்படம் முதல்நாளில் மட்டும் ரூ.10.26 கோடி வசூலித்தது. தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறுகளில் வசூல் இன்னும் அதிகரிக்க மூன்றே நாளில் ரூ.40.05 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. சுமார் ரூ.70 கோடி பட்ஜெட்டில் தயாரான பேட்மேன் இந்தவார முடிவில் அசலை கடந்து, லாபத்தை கொடுக்கும் என்கிறார்கள்.