ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜேபி தத்தா இயக்கத்தில் அர்ஜூன் ராம்பால், சோனு சூட், ஹர்ஷவர்தன் ராணே, சித்தாந்த் கபூர், லுவ் சின்ஹா நடிப்பில் உருவாகி வரும் படம் பால்தன். இந்தியா - சீனா இடையேயான போரை மையமாக வைத்து, ராணுவ வீரர்களின் உறவுகள் மற்றும் உணர்வுகளை சொல்லும் விதமாக, ராணுவ வீரர்களை பெருமைப்படுத்தும் விதமாக இப்படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் இப்போது புதிதாக நடிகை இஷா குப்தாவும் இணைந்துள்ளார்.
இதுகுறித்து இஷா கூறுகையில், பால்தன் படத்தில் நான் நடிப்பது பெருமையளிக்கிறது. அர்ஜூன் ராம்பால் உடன் சக்கரவியூ என்ற படத்தில் நடித்தேன். அது நல்ல அனுபவமாக இருந்தது. தற்போது மீண்டும் அவருடன் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் நானும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளேன் என்றார்.