மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பத்மாவத் படம் தந்த வெற்றி மற்றும் பாராட்டால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ரன்வீர் சிங். தற்போது கல்லி பாய், சிம்பா மற்றும் 83 படங்களில் நடித்து வருவபவர், அடுத்தப்படியாக ஆதித்யா சோப்ரா தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். படத்தில் அவர் சர்தார் வேடத்தில் நடிக்கிறார். இதுப்போன்ற வேடத்தில் இவர் நடிப்பது இதுவே முதல்முறை. படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. படத்திற்கு பவ்ஜியா என பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தாண்டுக்குள் படப்பிடிப்பை முடித்து அடுத்தாண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.