ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். இவர், வெப் சிரீஸில் ஒன்றில் நடிப்பார் என தெரிகிறது. சமீபகாலமாக இணையதளங்களில் வெப்சீரிஸ் மிகவும் பிரபலமாகி வருகிறது. அந்தவகையில், பர்கான் அக்தர் தயாரிப்பில் வெளியான "இன்சைடு எட்ஜ்" ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. கரண் அனுஷ்மான் இயக்கத்தில், விவேக் ஓபுராய், ரிச்சா சத்தா, தனுஜ் விர்வானி மற்றும் அங்கத் பேடி ஆகியோர் முதன்மை ரோலில் நடித்தனர். கிரிக்கெட், அதில் நடக்கும் சூதாட்டம் உள்ளிட்ட விஷயங்களை அடக்கி இந்த சீரியல் வெளிவந்தது.
முதல்பாகத்திற்கு கிடைத்த வரவேற்பால் பர்கான் அக்தர், இரண்டாவது சீசனை சமீபத்தில் அறிவித்தார். கிரிக்கெட் சம்பந்தப்பட்ட சீரிஸ் என்பதால் ஒரு கிரிக்கெட் வீரரே நடித்தால் சிறப்பாக இருக்கும் என கருதிய பர்கான் அக்தர், தற்போது யுவராஜ் சிங்கை நடிக்க வைக்க எண்ணியுள்ளனர். இதுதொடர்பாக அவரிடம் பேசி வருகின்றனர். இன்னும் அவர் உறுதி சொல்லிவில்லை, ஆனால் நடிப்பார் என நம்பந்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.