சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறிது நேரம் தொகுப்பாளராக வந்தார். இந்திய நடிகைகளில் இந்த கவுரவம் முதன் முதலாக பிரியங்காவுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் படங்கள் பட்டியலை வெளியிடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகளுக்கே இது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற மார்ச் மாதம் 4-ந் தேதி நடக்கிறது. இந்த விருதுக்கு ஏராளமான படங்கள் விண்ணப்பித்துள்ளன. அவற்றிலிருந்து விருது போட்டிக்கு தகுதியான படங்களை ஆஸ்கர் விருது கமிட்டி தேர்வு செய்துள்ளது. பின்னர் இந்தப் படங்களில் இருந்து சிறந்த படங்கள், கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் அறிவிக்கப்படும்.
இந்த பரிந்துரை படங்கள் அறிவிப்பு நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ராவுடன் ஹாலிவுட் நடிகைகள் ரொசாரியோ டான்சன், ரிபெல் வில்சன், மச்செல் யோ, மிச்சல் ரோட்ரிக்ஸ் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். இதற்கான படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. அந்த படங்களை ஆஸ்கர் அகாடமி தங்களது அதிகாரபூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.