Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நடிப்பது என் வேலையல்ல : அனுராக் காஷ்யாப்

12 ஜன, 2018 - 14:45 IST
எழுத்தின் அளவு:
Acting-is-not-my-cup-of-Tea---Anurag-Kashyap

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யாப். புதுமுகங்கள் நடிப்பில், இவரது இயக்கத்தில் இன்று(ஜன., 12) வெளியாகி உள்ள படம் முக்காபாஸ். முன்னதாக இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுராக், நமக்கு அளித்த சிறப்பு பேட்டி...

முக்காபாஸ் படம் யாருடையதாவது வாழ்க்கை படமா?

வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை வைத்து இப்படம் உருவாகி உள்ளது. அது ஒருவரின் வாழ்க்கை என்று சொல்ல முடியாது, இரண்டு - மூன்று பேரின் வாழ்க்கையாக இருக்கும். இதற்கு மேல் இப்படம் பற்றி என்னால் எதுவும் கூற முடியாது. விளையாட்டில் நடக்கும் அரசியல் தலையீடு, அதில் நடக்கும் மோசடிகளை மையமாக வைத்தும் இந்த கதை இருக்கும். முழுமனதாக ஒரு நேர்மையான படத்தை இயக்கி உள்ளேன்.

அப்படின்னா உங்க படத்தில் விளையாட்டில் அரசியல் தலையீடு மற்றும் அதன் மோசடிகளை சொல்லப்போறீங்களா?
வெறுமென விளையாட்டில் நடக்கும் அரசியல் தலையீடுகளையும், அதில் நடக்கும் மோசடிகளை சொன்னால் அது ஆவணப்படம் போன்று தெரியும். இந்தப்படத்தில் இனவெறி குறித்து பேசியிருக்கிறேன். அதோடு, ஒரு அருமையான காதல் கதையையும் சொல்லியிருக்கிறேன்.

புதுமுகங்களை நடிக்க வைத்தது ஏன்?

இன்றைய சூழலில் பெரிய நடிகர்களை நாள் முழுக்க நடிக்க வைப்பது என்பது இயலாத காரியம். ஆகையால், தான் புதுமுகங்களை நடிக்க வைத்தேன். வினீத் குமார், ஜோயா ஹூசைன் இருவரிடம் நன்றாக வேலை வாங்க முடிந்தது.

பாம்பே வெல்வெட் படம் இயக்கியது தவறு என்று எண்ணியது உண்டா?

ஒருபோதும் அப்படி எண்ணியதில்லை. இயக்குநர்களுக்கு தோல்வி வரும், நானும் தோல்வி படங்களை கொடுத்தவன் தான். ஆகையால் நான் தவறு என்று எடுத்து கொள்ள மாட்டேன். ஏனென்றால், என் மூளை என்ன சொல்கிறதோ, அதை செய்கிறேன். பாம்பே வெல்வெட், பாக்ஸ் ஆபிஸில் வசூலிக்கவில்லை, காரணம் படத்தின் பட்ஜெட் அதிகம். நான் இதுவரை பெரிய பட்ஜெட் படங்களை இயக்கியது கிடையாது, ஆனால் இந்தப்படத்திற்கு அது தேவைப்பட்டது.

பாலிவுட் பார்ட்டிகளில் உங்களை காண முடிவதில்லையே?

இதுபோன்ற பார்ட்டிகளிலிருந்து விலகி இருக்கவே நான் விரும்புகிறேன். ஏனென்றால் அந்த சூழல் எனக்கு செட்டாகாது. யாராவது என்னை அவர்களது வீட்டிற்கு அழைத்தால் செல்வேன், ஆனால் பார்ட்டிக்கு கூப்பிட்டால் போகமாட்டேன். ஒருவேளை எப்போதாவது ஹோட்டலுக்கு செல்ல விரும்பினால் என் குடும்பத்துடன் மட்டுமே செல்வேன்.

படங்களில் நீங்கள் நடிப்பது பற்றி சொல்லுங்க?
நடிப்பதற்கு எனக்கு ஆர்வமில்லை. இருந்தாலும் அகிரா படத்தில் நடித்தேன், நிறையபேர் பாராட்டினார்கள், மகிழ்ச்சி அளிக்கிறது. இருந்தாலும் நடிப்பது என் வேலை இல்லை.
இவ்வாறு அனுராக் காஷ்யாப் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நான்கு வருடங்களுக்குப்பிறகு ராணி முகர்ஜி நடிக்கும் ஹிச்கி!நான்கு வருடங்களுக்குப்பிறகு ராணி ... பேய் என்றால் எனக்கு பயம் : ஜரீன் கான் பேய் என்றால் எனக்கு பயம் : ஜரீன் கான்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Charlie Chaplin 2
  • சார்லி சாப்ளின் 2
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
  Tamil New Film Kanchana 3
  • காஞ்சனா 3
  • நடிகர் : ராகவா லாரன்ஸ்
  • நடிகை : வேதிகா ,ஓவியா
  • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
  Tamil New Film Kazhugu 2
  • கழுகு 2
  • நடிகர் : கிருஷ்ணா
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :சத்ய சிவா
  Tamil New Film K 13
  • கே 13
  • நடிகர் : அருள்நிதி
  • நடிகை : ஸ்ரத்தா தாஸ்
  • இயக்குனர் :பரத் நீலகண்டன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in