ஜூலையை குறிவைக்கும் ‛டயங்கரம்' | 'பெத்தி' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | பரிமளா அண்ட் கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா...? | 19 ஆண்டுகளுக்கு பின் ஜீவா, அஞ்சலி கூட்டணி | கர்ணபரம்பரையாக கேட்டு மகிழ்ந்த “கண்ணகி” கதையின் கலையுலக சாதனை | ‛கருப்பு 300' கோடி வசூலிக்குமா?, மூக்குத்தி அம்மன் 3 உருவாகுமா? | கீர்த்தி சுரேஷின் ‛ரப்தார்' ரிலீஸ் தேதி வெளியானது | 'பெத்தி' படத்திற்கு வந்த புதிய சிக்கல் | 58 மணி நேரத்தில் 100 கோடி வசூலித்த 'திரிஷ்யம் 3' | பக்த பிரகலாதா, கபாலி, தெறி : ஞாயிறு திரைப்படங்கள் |

‛பேபி ஜான்' படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மற்றுமொரு ஹிந்தி படம் ‛ரப்தார்'. இதில் ராஜ்குமார் ராவ் ஹீரோவாக நடித்துள்ளார். ஆதித்யா நிம் பல்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் அனுராக் தாக்கூர், ரோகன் வர்மா, தன்யா மணித்லா, ரஜித் கபூர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கல்வி தொடர்பான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை முதலில் ஜூலையில் வெளியிட திட்டமிட்டனர். ஆனால் பட பணிகள் இன்னும் முடியவில்லை. அதனால் அக்டோபர் 16க்கு ரிலீஸை மாற்றி உள்ளனர். தசரா வார இறுதியை முன்னிட்டு இந்த தேதியில் படத்தை வெளியிடுகின்றனர்.
ரப்தார் படம் தவிர்த்து தமிழில், ‛சத்யவான் சாவித்ரி', தெலுங்கில் ‛ரவுடி ஜனார்த்தனா' போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.