Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மலையாள நடிகர் சந்தோஷ் நாயர் சாலை விபத்தில் மரணம் : மனைவி கவலைக்கிடம்

05 மே, 2026 - 07:02 IST
எழுத்தின் அளவு:
Malayalam-actor-Santhosh-Nair-dies-in-road-accident-Wife-in-mourning
Advertisement

மலையாளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்ர நடிகராக நடித்து பிரபலமானவர் சந்தோஷ் நாயர். 1982-ல் 'இது ஞங்களுடே கதா' என்கிற படத்தின் மூலம் அறிமுகமான இவர், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'மோகினியாட்டம்' திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இன்று காலை திருவனந்தபுரத்திலிருந்து கோட்டயத்திற்குத் தனது இன்னோவா காரில் மனைவி ராஜலட்சுமியுடன் பயணித்தார் சந்தோஷ் நாயர்.. அவரே காரை ஓட்டிச் சென்றார். காலை 6:15 மணியளவில் அடூர் பகுதியில் எம்.ஜி. சாலையில் எதிரே வந்த லாரியும், சந்தோஷ் நாயரின் காரும் மோதி விபத்துக்குள்ளானது. கார் உருக்குலைந்த நிலையில், காரின் பாகங்களை வெட்டி எடுத்து கணவன் - மனைவி இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிகிச்சையின் போது ஏற்பட்ட மாரடைப்பால் சந்தோஷ் நாயர் காலமானார். அவரது மனைவியின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நிவின்பாலி - மமிதா பைஜுவின் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படப்பிடிப்பு நிறைவுநிவின்பாலி - மமிதா பைஜுவின் ... தவறு பஹத் பாசில் மீது அல்ல : 'பேட்ரியாட்' இயக்குநர் விளக்கம் தவறு பஹத் பாசில் மீது அல்ல : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap