'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

பிரியதர்ஷன் இயக்கத்தில், அக்ஷய்குமார், பரேஷ் ராவல், தபு மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த ஹிந்திப் படம் 'பூத் பங்களா'. தொடர்ந்து தோல்விகளால் தடுமாறி வந்த அக்ஷய்குமாருக்கு இந்தப் படம் மீண்டும் வெற்றியைக் கொடுத்து அவரை மீட்டெடுத்துள்ளது.
இரண்டு வாரங்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் தற்போது 200 கோடி வசூலையும் கடந்துள்ளது. அக்ஷய்குமார் நடித்து வெளிவந்த படங்களில் 200 கோடியைக் கடந்த 12வது படமாகவும், 100 கோடியைக் கடந்த 20வது படமாகவும் இப்படம் அமைந்துள்ளது.
2026ல் வெளிவந்த ஹிந்திப் படங்களில் அதிக வசூலைக் குவித்த 3வது படமாக இருக்கிறது. 1800கோடிகளைக் கடந்துள்ள 'துரந்தர் 2' முதலிடத்திலும், 450 கோடிகளைக் கடந்த 'பார்டர் 2' படம் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இந்தப் படத்தின் வெற்றியால் அக்ஷய் வைத்து படமெடுத்து வரும் தயாரிப்பு நிறுவனங்கள் மகிழ்ச்சியில் உள்ளன.