Advertisement

சிறப்புச்செய்திகள்

கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

லாரன்ஸ் ஆப் பஞ்சாப் : வெப் தொடரை வெளியிட அரசு தடை

28 ஏப், 2026 - 03:38 IST
எழுத்தின் அளவு:
Lawrence-of-Punjab-Government-bans-release-of-web-series
Advertisement

பஞ்சாபை சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய். பாடகர் சித்து மூஸ்வாலாவின் படுகொலை, சல்மான்கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தியது, சல்மான்கானின் நண்பரும் மற்றும் மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டது உள்பட பல்வேறு வழக்குகளில் லாரன்ஸ் பிஷ்னோய் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறையில் இருந்து கொண்டே தனது அடியாட்கள் மூலம் தொடர்ந்து வன்முறை குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், லாரன்ஸ் பிஷ்னோய் வாழ்க்கை சம்பவங்களை தழுவி, 'லாரன்ஸ் ஆப் பஞ்சாப்' என்ற வெப்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஜீ5 ஓடிடி தளத்தில் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தொடரை வெளியிடக்கூடாது என்று லூதியானா எம்.பி. ராஜா வாரிங் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் “இந்த தொடர் சிறையில் உள்ள ரவுடியை மகிமைப்படுத்துவதாகவும், அவர்களின் செயலை நியாயப்படுத்துவதாவும் இருக்கிறது. இது இளம் பார்வையாளர்களைப் பாதிக்கக்கூடும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நடந்து வரும் நிலையில் “இத்தொடரின் உள்ளடக்கத்தில் குற்றச்செயல்களை பெருமைப்படுத்தும் சாத்தியக்கூறுகள் இருப்பதால், சர்ச்சைக்குரிய வெப்தொடரை வெளியிட வேண்டாம் என்று ஜீ5 ஓடிடி தளத்துக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியது. இதையடுத்து வெப்தொடரின் வெளியீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

லாரன்சின் செயல்களை நியாயப்படுத்தி, அவரை புகழ்ந்து வந்த சுமார் 2600 இணையதள கணக்குகளை பஞ்சாப் அரசு தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'3 இடியட்ஸ்' இரண்டாம் பாகம்: உறுதி செய்த அமீர்கான்'3 இடியட்ஸ்' இரண்டாம் பாகம்: உறுதி ... பாடலில் ஆபாசம் : மகளிர் ஆணையத்திடம் நேரில் மன்னிப்பு கேட்ட சஞ்சய் தத் பாடலில் ஆபாசம் : மகளிர் ஆணையத்திடம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap