Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நல்ல நண்பரை காதலராக்காதீர்கள் : கங்கனா ரணாவத்

18 ஏப், 2026 - 05:48 IST
எழுத்தின் அளவு:
Dont-turn-a-good-friend-into-a-lover-Kangana-Ranaut
Advertisement

பீகாரை சேர்ந்த அரசியல்வாதி சிராக் பஸ்வானுடன் தனக்கு காதல் இருப்பதாக பரவிய செய்திகளை உறுதியாக மறுத்திருக்கிறார் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். இது குறித்து அவர் கூறுகையில், சிராக் எனது நண்பர் மட்டுமே. எங்களது நட்பு பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தாங்கள் ஒன்றாக பணியாற்றியதாகவும் அப்போது முதல் நட்புடன் இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, எங்களுக்கிடையே ஏதேனும் காதல் இருந்திருந்தால் அது நீண்ட காலத்துக்கு முன்பே உருவாகி இருக்கும். அப்படி இல்லாததால் நாங்கள் இப்போது வரை நண்பர்களாகவே இருந்து வருகிறோம். எங்களுக்கிடையே நட்பை தாண்டிய உறவு இருப்பதாக வெளியாகி வரும் செய்திகள் முழுக்க முழுக்க வதந்தி மட்டுமே. இது ஆதாரமற்ற செய்திகள் என்று தன்னை பற்றி பாலிவுட்டில் பரவி வரும் செய்திகளுக்கு விளக்கம் கொடுத்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கங்கனா.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அப்ரூவராக மாறும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் : வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதிஅப்ரூவராக மாறும் ஜாக்குலின் ... மீண்டும் தாயாகிறார் தீபிகா மீண்டும் தாயாகிறார் தீபிகா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Premanathan S - Cuddalore,இந்தியா
21 ஏப், 2026 - 10:04 Report Abuse
Premanathan S நடிகர்-நடிகர்கள் பேச்சு, குடிக்காரன் பேச்சு, அரசியல் வாதி பேச்சு நல்லா நம்பலாம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap