அதிதி ஷங்கரின் அடுத்த படம் | தனுசுடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் | விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின் | இயற்கை விவசாயத்தில் இறங்கிய நடிகர் கிஷோர் | படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் | ஏ.ஆர் ரஹ்மானை ஆனந்த கண்ணீர் விட வைத்த மலையாள சூப்பர் சிங்கர் |
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியரில் குறிப்பிட வேண்டியவர்கள் அஜய் தேவகன், கஜோல். இவர்களுக்கு நைசா என்ற மகளும், யக் என்ற மகனும் இருக்கிறார்கள். 20 வயதை அடுத்த மாதம் கடக்க உள்ள நைசாவின் சமீபத்திய போட்டோ ஷுட் படங்கள் இணையத்தில் வைரலாகி அவரைப் பற்றி அதிகம் பேச வைத்துள்ளன.
அந்தப் புகைப்படங்களில் அப்படியே அம்மா கஜோல் போலவே இருக்கிறார். நைசா புகைப்படத்தையும், கஜோல் புகைப்படத்தையும் பகிர்ந்து அம்மாவைப் போலவே மகளும் அழகு என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகிறார்கள். நைசாவின் பல கிளாமர் புகைப்படங்கள் ஏற்கெனவே இணையங்களில் சர்ச்சை கலந்த வரவேற்பைப் பெற்றவை.
பாலிவுட்டில் நட்சத்திர தம்பதியரின் வாரிசு, நடிகர், நடிகைகளின் வாரிசுகளுக்குப் பஞ்சமில்லை. அந்த வரிசையில் விரைவில் நைசாவும் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அஜய் தேவகன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள 'கைதி' படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'போலா' இந்த மாதம் 30ம் தேதி வெளியாக உள்ளது.