Advertisement

சிறப்புச்செய்திகள்

நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கவனம் ஈர்க்கும் சர்தார் உதம் சிங்

22 அக், 2021 - 14:52 IST
எழுத்தின் அளவு:
Sardar-udham-singh-impress-everyone

கடந்த 16ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியான இந்திப் படம் சர்தார் உதம். இந்த படம் தற்போது இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் டிரண்டாகி வருகிறது. இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது 1919ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் ஜாலியன்வாலா பாக்கில் அமைதியான வழியில் போராடிய மக்களை ஜெனரல் டயர் என்ற ஆங்கில தளபதி கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றான். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள், பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தார்கள்.

இந்த படுபாதக செயலை செய்த ஜெனரல் டயர் பணி ஒய்வு பெற்று லண்டனில் வசித்து வந்தார். அவனை தேடிச் சென்று சுட்டுக் கொன்ற உதம் சிங் என்ற இளைஞனின் கதைதான் இந்த படம். இந்த படத்தின் கதை மட்டுமல்லாத அதை உருவாக்கிய விதம், பயன்படுத்தப்பட்ட வசனங்கள், நடித்தவர்களின் நடிப்பு, ஒளிப்பதிவு, இசை என எல்லா விதங்களிலும் படத்திற்கு பாராட்டு கிடைத்து வருகிறது.

உதம் சிங்காக பாலிவுட் நடிகர் விக்கி கவுசலும், பனிதா சந்து அவரது காதலி ரேஷ்மாவாகவும், ஹாலிவுட் நடிகர் ஷான் ஸ்கார் ஜெனரல் டயராகவும், ஸ்டீபன் கோஹன் லண்டன் உயர் போலீஸ் அதிகாரியாகவும், அமோல் பர்சார் பகத்சிங்காகவும் நடித்திருக்கிறார்கள்.

தற்போது இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு அனுப்ப தேர்வு செய்யப்பட்டுள்ள படங்கள் பட்டியலிலும் இந்த படம் இடம்பெற்றுள்ளது. அமேசான் தளத்தில் அதிக பார்வையாளர்களை கவர்ந்து முதல் இடத்திலும் இருக்கிறது. இந்தப் படம் தமிழ் சப் டைட்டிலுடன் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
விசாரணைக்கு ஆஜரரான அனன்யா பாண்டேவிசாரணைக்கு ஆஜரரான அனன்யா பாண்டே மலையாளத்தில் படம் தயாரிக்கும் ஜான் ஆப்ரஹாம் மலையாளத்தில் படம் தயாரிக்கும் ஜான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் ஜெனரல் டயர் என்ற அயோக்கியனை மாவீரன் போல சித்தரித்து தமிழக கல்வியறிவு உத்தம் சிங் அவர்களை பற்றி ஒரு எழுத்து கூட சொல்லித் தரவில்லை காரணம் திராவிட மாயை
Rate this:
22 அக், 2021 - 15:01 Report Abuse
சாம் வந்தே மாதரம்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in