Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

குழப்பத்தில் குழு !

20 செப், 2020 - 11:49 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

ஒரு காலத்தில் வில்லனாக மிரட்டியவர் இந்த நடிகர். காலப்போக்கில் காமெடி வில்லனாகிப் போனார். சமீபத்திய தேர்தலில் களமிறங்கி அவர் நிஜத்திலும் பல காமெடிக் காட்சிகளை நடத்திக் காட்டியது ஊரறிந்த கதை தான்.

வழக்கமாக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டவர்களைத் தான் பெரிய முதலாளி வீட்டிற்கு அழைப்பர். அந்தவகையில் முன்னாள் வில்லனையும் அழைக்கலாமா என ஆலோசித்தார்களாம். ஆனால் ஏற்கனவே பலத்த கெடுபிடிகளுக்கு இடையில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் மாதிரி ஏதாவது ஏடாகூடமாகச் செய்து பிரச்சினையாகி விட்டால் என்ன செய்வது என அந்த திட்டத்தை கைவிட்டு விட்டதாகத் தெரிகிறது.

கடந்த சீசனிலேயே அப்படி எதேச்சையாக பேசிய ஒரு வார்த்தை எவ்வளவு பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் தான் அந்த யோசனையை மாற்றிக் கொண்டதாம் தயாரிப்புக் குழு.

எதிர்பாராததை எதிர்பார்ப்பது தான் அந்த நிகழ்ச்சியின் ஸ்பெஷலே. எனவே கடைசி நேரத்தில் சம்பந்தப்பட்ட நடிகர் போட்டியாளராக களமிறக்கப் பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
நடிகையின் புது முடிவு!நடிகையின் புது முடிவு! உள்ளாடையால் சர்ச்சை! உள்ளாடையால் சர்ச்சை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Aanandh - thamizhnaadu,இந்தியா
21 செப், 2020 - 00:49 Report Abuse
Aanandh ஆக, ஆனந்தராஜ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வர வாய்ப்பு இருக்கிறது.
Rate this:
Venkatesh - Tirunelveli ,இந்தியா
03 அக், 2020 - 17:47Report Abuse
Venkateshமன்சூர் அலிகான்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in