Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நடிக்க வந்து சொல்லாமல் ஓடிய இயக்குனர்

09 மார், 2020 - 15:24 IST
எழுத்தின் அளவு:
Cine-gossips

தமிழ் சினிமாவில் கவிதை நடையில் அழகு தமிழில் பெயர் வைத்து படங்களை இயக்கும் மலையாள இயக்குனர் அவர். சமீப காலமாக நடிகராகவும் பெயர் பெற்று வருகிறார்.

சமீபத்தில் அவருடைய நடிப்பில் வெளிவந்த ஒரு தமிழ்ப் படமும், மலையாளப் படமும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளன. அவர் நடிக்க ஒத்துக் கொண்டு பின் நடிக்க மறுத்த ஒரு படம் இந்த வாரம் வெளியாக உள்ளது.

அந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்து வெளியூரில் நடந்த படப்பிடிப்பில் ஒரு நாள் கலந்து கொண்டு நடித்தாராம். அதன்பின் சொல்லாமல் கொள்ளாமல் படப்பிடிப்பை விட்டு ஓடி வந்துள்ளார்.

பலமுறை அவரைத் தொடர்பு கொண்டும் பதிலளிக்கவேயில்லையாம். வேறு வழியில்லாமல் அவரது கதாபாத்திரத்தில் ஒளிப்பதிவாளராக இருந்து நடிகராக மாறிய ஒருவரை நடிக்க வைத்து படப்பிடிப்பை முடித்தார்களாம்.

ஓடி வந்த இயக்குனர் கம் நடிகரின் சில படங்களே இன்னும் வெளிவராமல் தவித்துக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்டவரே இப்படி ஓடி வந்தது பற்றி படக்குழுவினர் திட்டித் தீர்க்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் நடிப்புமீண்டும் நடிப்பு நடிகையை ஓரங்கட்டிய கோலிவுட்! நடிகையை ஓரங்கட்டிய கோலிவுட்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

09 மார், 2020 - 16:17 Report Abuse
Sathish Kumar goutham vasudev Menon
Rate this:
Loga - Doha,கத்தார்
09 மார், 2020 - 16:04 Report Abuse
Loga கவுதம் மேனன்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in