Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

காதலரிடம் சரணடைந்த நடிகை

26 அக், 2019 - 14:38 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

சென்னை: தொடர் தோல்விகளால் மனமுடைந்த பிரபல நடிகை, காதலரிடம் சரணாகதி அடைந்து விட்டாராம். மற்ற நடிகைகள் பொறாமையில் புழுங்கிப் போகும் அளவிற்கு அதிரடியாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையானவர் இந்த நடிகை. மூத்த நடிகர்கள், இளம் நடிகர்கள் என யாராக இருந்தாலும் அவர்களுடன் கெமிஸ்ட்ரியை கச்சிதமாக கொண்டு வருவதில் வல்லவர். இதனாலேயே எல்லா இயக்குநர்களின் முதல் சாய்ஸாகவும் இப்போது வரை இருந்து வருகிறது.

சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், இதுவரை அவரது திரையுலக வாழ்க்கை நிம்மதியாகவே போய்க் கொண்டிருந்தது. நடிகை தொட்டதெல்லாம் பொன்னாக மாறியது. இதனாலேயே அவர் கேட்ட சம்பளத்தை தர தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டவில்லை.

ஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை. தொடர் தோல்விகளால் நடிகை திணறிப் போய் இருக்கிறார். பெரிதும் எதிர்பார்த்த ஒரு முன்னணி நடிகரின் படமும் காலை வாரி விட்டது. இதனால் நடிகை ரொம்பவே அப்செட்டாம். அடுத்ததாக வெளிவரும் இன்னொரு படமும் தனக்கு பேர் வாங்கித் தந்தாலும், தராவிட்டாலும் எப்படியும் மற்றொரு வெற்றிப்படம் கொடுத்தே ஆக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார் நடிகை.

இதனால் காதலரின் உதவியைத் தான் நடிகை ரொம்பவே நம்பியிருக்கிறாராம். அவரது படம் நிச்சயம் தன்னை காப்பாற்றும் என நினைக்கிறாராம் நடிகை.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
சம்பளப் பிரச்சினை செய்யும் நடிகைசம்பளப் பிரச்சினை செய்யும் நடிகை மதுவுக்கு அடிமையான நடிகை மதுவுக்கு அடிமையான நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Aarkay - Pondy,இந்தியா
01 நவ, 2019 - 14:54 Report Abuse
Aarkay தொடர் தோல்வியா? அப்போ பிகில் இருநூறு கோடி என்று சொன்னதெல்லாம்??? இந்தப்படமும் சங்குதானா? இன்னொரு சுறாதான? சூப்பர்
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
29 அக், 2019 - 18:13 Report Abuse
Vasudevan Srinivasan எதற்கும் அஞ்சாத 'தன்னம்பிக்கை நாயகி' நயன்தாரா.. தொடர் தோல்வியெல்லாம் இல்லை விஸ்வாசம் வெற்றி தற்போது பிகிலும் வெற்றிதான்..
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
01 நவ, 2019 - 14:55Report Abuse
Aarkayவெற்றியா? சங்குன்னு சொன்னாங்க...
Rate this:
27 அக், 2019 - 18:34 Report Abuse
சுறா கோபாலன் அவசர பட்டு evening showku bulka 20 டிக்கெட் வாங்கி வெச்சேன், demand இருக்கும் போது நல்ல லாபம் பார்க்கலாம் என்று, ஆனால் தியேட்டர் டிக்கெட் counterலியே காத்து வாங்குது. சும்மா கொடுத்தாலும் யாரும் வர மாட்டிகிறார்கள். 4000ரூபாய் அம்பேல். இருபது டிக்கெட்டையும் சுண்டல் விற்பவனிடம் பொட்டலம் மடிக்க கொடுத்து விட்டேன் ஆனால் அவர் கூட வாங்க தயக்கம் காட்டினார்..
Rate this:
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
27 அக், 2019 - 14:09 Report Abuse
Sathyanarayanan Bhimarao எந்த வெற்றியானாலும் நேரம் காலம் சரியாக இருக்கும் வரைதான் வெற்றி நிலைக்கும். அது நடிக நடிகையரின் தவறு அல்ல. நடிகர் திலகம் போன்ற மாபெரும் நடிகர்களுக்கு கூட வரிசையாகத் தோல்விப் படங்கள் இறுதிக்கு காலத்தில் வந்தன. முதல் மரியாதை, தேவர் மகன் போன்ற படங்கள் மீண்டும் அவர் புகழை உயர்த்தின. திரையுலகில் பெண் நட்சத்திரங்கள் எட்டாத மாபெரும் உயரத்தை எட்டிய லேடி சூப்பர் ஸ்டார், யாருமே எட்டாத உயரத்தை எட்டி விட்டார். வேறு குறுக்கு வழியைத் தேடாமல் சம்பாதித்த பணத்தை சேர்த்து வைத்து நிம்மதியான வஸ்வைத் தேடுவதே நல்லது,
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
02 நவ, 2019 - 05:42Report Abuse
meenakshisundaramஇவர் தானாக முன் வந்து அளவற்ற உதவிகள் செய்பவர் என்று சொல்வார்கள், எதிர்காலத்தை கவனமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்,வாழ்த்துக்கள்.நமது தமிழ் உலகம் எளிதில் மறக்கும் தன்மை கொண்டது ....
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
27 அக், 2019 - 10:31 Report Abuse
Natarajan Ramanathan ஊதவேண்டிய பிகிலும் ஊத்திக்கொண்டதால் நடிகை அப்செட்டாம்
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in