இரண்டிலும் தொடர விரும்புகிறேன்! | ஸ்ரீரெட்டியின் சாதனை! | விதியை கூறும், 'பச்சை விளக்கு' | வில்லனான பிரபல ஓவியர்! | கேட்டு வாங்கிய முத்தம்! | மணிரத்னம் - ஏ.ஆர்.முருகதாஸ் போட்டி! | என் வீட்டிற்கு வர வேண்டாம்! | எனக்கு திருப்புமுனை தந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ்- அனிருத் | ரஜினி எடுத்த சபதம் | ரஜினியை தப்பா பேசினா நானும் பேசுவேன் : லாரன்ஸ் |
தமிழ் சினிமாவில் தற்போதைக்கு அதிகப் படங்களில் நடிக்கும் மன்னர் பெயரைத் தன் பாதி பெயராக வைத்துக் கொண்டிருக்கம் நடிகருக்கு உற்சாக பானம் அருந்தும் பழக்கம் இருக்கிறது என சினிமாவில் உள்ளவர்களுக்குத் தெரியும். அவர் நடித்து இந்த மாதம் ஒரு படம் வெளிவர இருக்கிறது. அந்தப் படத்திற்கான பிரமோஷனுக்காக சில ரேடியோக்கள், டிவிக்கள் என சுற்றிச் சுற்றி பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறாராம்.
பகலில்தான் அந்த பேட்டிக்கள் நடைபெற்றது. அப்போதே அவர் அருகில் செல்ல முடியாதபடி உற்சாக பானத்தின் வாடை அடித்ததாம். பேட்டி எடுக்கச் சென்றவர்கள் கூட கொஞ்சம் தயங்கித்தான் பேட்டி எடுத்தார்களாம். நல்ல நடிகர், மக்களைக் கவர்ந்த நடிகர் என பெயரெடுத்தவர் பகலிலேயே அந்த இடங்களுக்கு இப்படி சென்றது சம்பந்தப்பட்ட மீடியாக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
தமிழ் சினிமாவில் உச்சத்திற்குச் சென்ற சில நடிகர்கள் உற்சாகபான பழக்கத்தால் உடைந்து போன நிலை இந்த நடிகருக்கும் வந்துவிடக் கூடாதென பேசிக் கொண்டார்களாம். தனக்குக் கிடைக்கும் வெற்றியை போதையாக தலையில் ஏற்றிக் கொள்ளாத நடிகர் என பேசப்படுபவர் இப்படி உற்சாக பானத்தால் கிடைக்கும் போதையை தலையில் ஏற்றிக் கொள்கிறாரே.....