Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

மீண்டும் சேர்ந்தவருக்கான முதல் அசைன்மென்ட்

13 ஜூன், 2019 - 13:04 IST
எழுத்தின் அளவு:
Cine-gossips

ஒரு கழகத்திலிருந்து இன்னொரு கழகத்திற்குப் போய் மீண்டும் கழகத்திற்கு வந்து, விலகி, வந்து என மாறி மாறி அரசியல் 'நடித்துக்' கொண்டிருந்தவர் நேற்று மீண்டும் ஒரு கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அவரது இணைப்பு திடீர் இணைப்பில்லை, தேர்தல் நேரத்தின் போதே நடந்திருக்க வேண்டியதுதான் என்கிறார்கள். ஒரு முன்னணி நடிகையைப் பற்றி ஆபாசமாகப் பேசி சிக்கியவரை அப்போதே கட்சியில் சேர்த்திருந்தால் பிரச்சினை ஆகியிருக்கும். பிரச்சினை ஆறிப்போனதும் சேர்க்கலாம் என காத்திருந்தார்களாம்.

மேலும், தற்போது அந்த நடிகரை சேர்த்தற்கும் காரணம் இருக்கிறதாம். நடைபெற உள்ள சங்கத் தேர்தலில் தற்போதைய ஆளும் நிர்வாகத்தை எதிர்த்து அவரை நேரடியாக களம் இறங்கி வாக்கு சேகரிக்க சொல்லியிருக்கிறார்களாம். எதிர்த்து நிற்கும் அணி ஆளும் கட்சியின் ஆதரவு அணி என்பது இப்போது எல்லாருக்கும் தெரிந்துவிட்டதாம்.

அந்த அரசியல் நடிகர் சங்கத்தில் பதவி வகித்த காலத்தில் சிக்கிய நிலப் பிரச்சினை ஒன்று இப்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதாம். அந்த நில விவகார சர்ச்சையில் இருந்து தன்னை காத்துக் கொள்ள ஆளும் கட்சியில் ஐக்கியமாவதுதான் அவருக்குச் சிறந்தது என அவருடைய நலம் விரும்பிகள் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள்.

நாட்டின் தேர்தல் முடிந்து நடிகர்களின் தேர்தல் வரும் சமயம் சேர்வது தான் சரியாக இருக்கும் என அவரும் காத்திருந்து சேர்ந்ததாகச் சொல்கிறார்கள். இன்னும் பத்து நாளில் நடைபெற உள்ள சங்கத் தேர்தலுக்கு பரபரப்பு கூடிக் கொண்ட போகிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
வீடு வாங்கி குவிக்கும் நடிகைவீடு வாங்கி குவிக்கும் நடிகை நிலை தடுமாறும் நடிகர் நிலை தடுமாறும் நடிகர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
17 ஆக, 2019 - 17:41 Report Abuse
Vasudevan Srinivasan திறமையான மிக நல்ல நடிகர்களில் இவர் (திரு. ராதாரவி) முக்கியமானவர் அரசியலை விட்டுவிட்டு மீண்டும் தொடர்ந்து நடித்து வெற்றி பெறவேண்டும்..
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
20 ஜூன், 2019 - 03:23 Report Abuse
meenakshisundaram வைகோவுக்கு அடுத்தபடி இருக்கும் இடத்துக்கு (கட்சி ஏற்ப டயலாக் விடும் திறமை உண்டு இவரிடம்.
Rate this:
13 ஜூன், 2019 - 18:36 Report Abuse
நாசிக் ஜோசப் விசய்
Rate this:
நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ
13 ஜூன், 2019 - 17:53 Report Abuse
நெல்லை மணி, ராதாரவி ஆளும்கட்சியில் சேர்வதால் ஆளும்கட்சிக்கு என்ன பயன்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in