Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நண்பனுக்கு வெற்றி கொடுத்த நண்பன்

08 ஜூன், 2019 - 16:03 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

இசையமைப்பாளர் கம் நடிகருக்கு '...........காரன்' படம்தான் ஒரு நாயகனாக பெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்தது. அதன் பிறகு அவர் நடித்து வெளிவந்த ஒரு படம் கூட ஓடவில்லை. அதற்கு என்ன காரணம் என்று விசாரித்த போது அந்தப் படங்களில் இசை நடிகரின் தலையீடு அதிகமாக இருந்ததாம்.

இயக்குனர் என ஒருவர் பெயர் இருந்தாலும் படப்பிடிப்பிலிருந்து படத்தொகுப்பு வரை அனைத்திலும் இசை நடிகர் இப்படி செய், அப்படி செய் என சொல்லி அவர் இஷ்டத்திற்கு மாற்றிவிடுவாராம். அதன் காரணமாகத்தான் அவருடைய கடந்த சில படங்கள் வெற்றி பெறவேயில்லை. அவரே அந்தப் படங்களின் தயாரிப்பாளர் என்பதால் இயக்குனர்களும் வேறு வழியில்லாமல் விலகியே நின்று விடுவார்களாம்.

தன் தவறை உணர்ந்த இசை நடிகர் தற்போது வெளியான '...........காரன்' படத்தின் வேலைகளில் எதிலும் தலையிடவே இல்லையாம். இசையமைப்பதைக் கூட வேறு ஒருவரிடம் கொடுத்ததற்கு சரி என்று சொன்னாராம். படத்தை இயக்கியது அவருடைய கல்லூரி நண்பன் என்பதால், இயக்குனர் நண்பர் அனைத்தையும் தான் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தாராம். சொன்னபடி படமும் நன்றாக வந்து விமர்சனங்களும், வசூலும் சிறப்பாக இருக்கின்றதாம்.

இசை நடிகரின் தலையீடு இல்லாததே இப்படத்தின் வெற்றிக்குக் காரணம், இது போலவே அவர் இனி இருந்தால் பிரச்சினையில்லை என்கிறார்கள். இருந்தால் அவருக்கே நல்லதுதானே இருக்க மாட்டாரா என்ன...?.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
அரசியல் இல்லாமல் எப்படி.?அரசியல் இல்லாமல் எப்படி.? வீடு வாங்கி குவிக்கும் நடிகை வீடு வாங்கி குவிக்கும் நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

09 ஜூன், 2019 - 10:55 Report Abuse
Kalyanaraman விஜய் ஆன்டனி. ஹீரோவாக பெயர் வாங்கித் தந்த படம் பிச்சைக்காரன். சமீபத்திய படம் கொலைகாரன்
Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
12 ஜூன், 2019 - 10:50Report Abuse
எதிர்க்குரல் இதே பிச்சைக்காரன் மற்றும் கொலைகாரன் என்ற வார்த்தைகளை நான் பயன் படுத்திய போது அநாகரிக வார்த்தைகள் என்றதே ............
Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
09 ஜூன், 2019 - 10:28 Report Abuse
எதிர்க்குரல் ஒய் நீங்க நினைக்கிற பொண்ணுக்கு பிரச்சினை இல்லை. இது விஜய் ஆண்டனி பற்றியது.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
09 ஜூன், 2019 - 04:29 Report Abuse
meenakshisundaram ஓஹோ அதுதான் அரசியல் கருத்தும் வெளியிடுகிறானா? பாவம் சைந்தவி'
Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
09 ஜூன், 2019 - 07:46Report Abuse
எதிர்க்குரல் பெரியவரே மீனாட்சி இது விஜய் ஆண்டனி பற்றிய செய்தி உங்க ஆத்து பொண்ணுக்கு எந்த பிரச்சினையும் இல்ல ஜி வி நல்லாவே பார்த்துகிறார்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in