Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

'பேபி'யால் பொறாமைப்படும் சீனியர் நடிகை

04 ஜூன், 2019 - 15:51 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

சென்டிமென்ட், ராசி இது இரண்டும் இல்லாமல் சினிமா இருக்காது. தங்களது எழுத்தில், தங்களது கதையில் கோட்டை விடும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் கூட அவர்களது படங்கள் ஓடவில்லை என்றால் சம்பந்தமேயில்லாமல் அந்தப் படம் சம்பந்தப்பட்ட யார் மீதாவது குறை சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அவரது ராசிதான் காரணம், இவரது ராசிதான் காரணம் என அளந்துவிடுவார்கள். அந்த வரிசையில் தற்போது இரண்டு நடிகைகளின் ராசி பற்றி பேச ஆரம்பித்துவிட்டது தமிழ்த் திரையுலகம்.

சமீபத்தில் வெளிவந்த இனிஷியல் படத்தின் தோல்வி குறித்து அந்த இயக்குனர் மீதுதான் பலரும் விமர்சனக் கணைகளைத் தொடுத்து வருகிறார்கள். ஆனால், அவரோ படம் 60 கோடி வசூலித்துவிட்டது என்று யாரோ பரப்பும் பொய்யுரையை ரிடுவீட் செய்து வருகிறார். தன் தோல்வியை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார் என ஒரு சிலர் குற்றம் சாட்டுகிறார்கள்.

வேறு சிலரோ படத்தில் நாயகிகளாக நடித்தவர்கள் தமிழில் இதுவரை நடித்த படங்கள் ஓடவில்லை, அவர்களின் ராசிதான் இந்தப் படத்தின் தோல்விக்குக் காரணம் என திட்டமிட்டே பரப்பி வருகிறார்களாம். அதிலும் படத்தில் நடித்த தமிழ் நடிகையான 'பேபி' நடிகையின் நடனத் திறமையும், நடிப்புத் திறமையும் இங்குள்ள சில முன்னணி மலையாள நடிகைகளுக்கு பொறாமையாக உள்ளதாம். அவர்கள்தான் இப்படி ஒரு செய்தியை அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து பரப்பச் சொல்கிறார்களாம்.

எப்பேர்ப்பட்ட 'லோக்கல்' வேலையா இருக்கே இது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஒரே கதையில் 'இனிஷியல்' படங்கள்ஒரே கதையில் 'இனிஷியல்' படங்கள் அரசியல் இல்லாமல் எப்படி.? அரசியல் இல்லாமல் எப்படி.?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

05 ஜூன், 2019 - 12:02 Report Abuse
friends murugan N G K saipallavi
Rate this:
05 ஜூன், 2019 - 01:31 Report Abuse
Joseph Vijay விஜய்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in