Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

வெற்றி கிடைத்ததும் வரும் மமதை

18 பிப், 2019 - 11:53 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

'மமதை' என்றால் சிலருக்கு அர்த்தம் தெரியாது. அதற்கு 'தானே பெரியவன்' என்று அர்த்தம். சினிமாவில் மட்டும் சிலருக்கு இந்த மமதை சீக்கிரமே வந்துவிடும். வாய்ப்பு கிடைக்கும் வரை அப்பாவியாக இருப்பார்கள். வாய்ப்பு கிடைத்து, வெற்றியும் கிடைத்துவிட்டார் அவரா இவர் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு மாறிப் போயிருப்பார்கள்.

2019ம் ஆண்டில் எண்ணைத் தலைப்பாக வைத்து வந்த படத்தின் 100வது நாள் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் படத்தின் தயாரிப்பாளர் கலந்து கொள்ளவில்லை. அதோடு, அவரது நிறுவனத்தின் பெயரும் கூட போஸ்டர்களில் பட வினியோகஸ்தருக்குக் கீழ்தான் இடம் பெற்றிருந்தது. அந்தப் படம் உருவாக முழு முதல் காரணமாக இருந்தது தயாரிப்பாளர்தான். அதன்பின்னர்தான் வினியோகஸ்தர் மற்றவர்கள் எல்லாம். அந்த விழாவில் தயாரிப்பாளர் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஆனால், அவர்தான் கலந்து கொள்ளவில்லை என்றும் இயக்குனர் தரப்பில் தெரிவித்தார்கள்.

விசாரித்துப் பார்த்ததில் படம் வெற்றி பெற்றதுமே அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்கள் மாறிவிட்டதாக தயாரிப்பாளர் வருத்தப்பட்டிருக்கிறார். படத்தை வெளியீட்டுத் தேதியன்று வெளியிட முடியாமல் தயாரிப்பாளர் தவித்த போது, படத்தின் நாயகனும், வினியோகஸ்தரும்தான் தலையிட்டு படம் வெளிவர காரணமாக இருந்தார்களாம். அந்தப் பஞ்சாயத்தில் தயாரிப்பாளர் மீது படக்குழுவினருக்கு மனவருத்தம் வந்திருக்கிறது. அது அப்படியே தொடர்ந்து 100வது நாள் வரையும் வந்துவிட்டதாம். இருந்தாலும் இப்படி ஒரு படைப்பு உருவாக, இந்தக் கதையை நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளரைப் பற்றி யாருமே விழாவில் பாராட்டிப் பேசாதது தயாரிப்பாளரை வருத்தப்பட வைத்திருக்கிறது.

நிகழ்ச்சியில் யு டியூப் விமர்சகர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வீடியோவை வெளியிட்டார்கள். அதற்கு பத்திரிகைகள், இணையதளங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்க, மறுநாளே, மன்னிப்பு கேட்டு சரணடைந்துவிட்டார் படத்தின் இயக்குனர். இப்போது படம் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது. அங்காவது தயாரிப்பாளரின் நன்றியை இயக்குனர் மறக்காமல் இருக்கட்டும் என்கிறார்கள் கோலிவுட்டில்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சம்பளத்தை உயர்த்திய இசைசம்பளத்தை உயர்த்திய இசை புயலுக்கு பதில் யோகி? புயலுக்கு பதில் யோகி?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
23 பிப், 2019 - 16:50 Report Abuse
Vasudevan Srinivasan நடிகர்திலகம் மற்றும் மக்கள்திலகம் ஆகியோர் வானளாவிய புகழையும் செல்வத்தையும் பெற்றபின்பும் தயாரிப்பாளர்களை 'முதலாளி' என்றுதான் அழைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in