சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
யாரு இது நஸ்ரியா மாதிரி இருக்கேன்னு ஆச்சர்யப்படும் அளவு டப்மாஷில் கலக்கி, காதலர்கள் கொண்டாடிய 96, சிங்கப் பெண்களை போற்றிய பிகில்ல் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி, 13ம் நம்பர் வீடு மூலம் மிரட்ட வரும் வர்ஷா பேசுகிறார்..
கொரோனா ஊரடங்கு எப்படி எல்லாம் போனது
முதல் இரண்டு மாதங்கள் கஷ்டமா இருந்துச்சு. வீட்டுக்கு புது நாய்க்குட்டி வந்ததால் அதுகூட விளையாடுறேன். ஷூட்டிங் ஸ்டார்ட் ஆனதால் வேலை போகுது.
நஸ்ரியா தங்கை போல இருக்கிங்கனு சொல்றாங்களா
இப்போ இல்லை எப்பவுமோ யார் பார்க்குறாங்களோ நீங்க நஸ்ரியா தங்கையான்னு தான் கேட்கிறாங்க.
தமிழில் 13ம் நம்பர் வீடு, கன்னடத்தில் மானே என் 13
நிறைய பேருக்கு இந்த படத்தோட பெயர் சொன்னதும் அந்த பேய் படத்துடன் இணைத்து கேட்கறார்கள். எங்களுக்கு இது சவாலா இருந்துச்சு. படத்தில் முடிந்தவரை சிறப்பாக வேலை பார்த்து இருக்கோம். 5 ஐ.டி., இளைஞர்கள் ஒருவர் பின் ஒருவர் இறப்பதும், பின் அவர்களுக்குள் நடக்கிற சம்பவங்களும் தான் கதை.
ஐந்து பேருடன் படத்தில் நடித்த விதம், அனுபவங்கள்
சாதாரண படத்துல எல்லா உணர்ச்சிகளை வெளிப்படுத்தலாம். திரில்லர் படத்தில் கற்பனையாக பக்கத்தில் பேய் இருப்பது போல பயந்து நடிப்பது கஷ்டம். ஓவர் ஆக்டிங் இல்லாமல் ஐந்து பேரும் நடித்திருக்கிறோம்
நிஜ வாழ்க்கையில உங்களுக்கு இருட்டு, பேய் பயம்
சின்ன வயசுல இருந்து இப்போ வரை அம்மா பக்கத்தில் தான் இருப்பேன். துாங்கும் போது அம்மா இல்லாட்டி லைட் ஆப் பண்ணி துாங்க முடியாது. டிவி பார்க்கும் போதும் லைட் எரியும். அந்த அளவு இருட்டு, பேய் பயம் இருக்கு.
ஒரு டப்மாஷ்ல ஆரம்பித்து 96 விஜய்சேதுபதி வரை
நான் எதிர்பார்க்கலை, மக்கள் என்னை நடிகையா ஏற்று கொண்டது பெரிய விஷயம். குறுகிய காலத்திலேயே பிகில் விஜய், 96 விஜய் சேதுபதி உடன் நடிச்சிட்டேன். இந்த வாய்ப்பு ரொம்ப பெருமையா இருக்கு.
தமிழில் நடிக்க ஏன் அதிக கவனம் செலுத்தவில்லை
தெலுங்கு, மலையாளத்தில் நடிச்சிருக்கேன். பிற மொழிகளில் நடிப்பதால் இடைவெளி இருக்கலாம். இப்போ எனக்கு கிடைக்கும் கேரக்டர்களில் நல்லா நடிக்க முடியுது. அதனால் நல்ல படங்கள் தேடி வருது. பொறுமையா மக்கள் விரும்பும் படங்களை தேர்வு செஞ்சு நடிக்கிறேன். தெலுங்கில் மிடில் கிளாஸ் மெலடிஸ் படம் சென்ற வாரம் வெளியாகி நல்ல பேர் வாங்கி கொடுத்ததில் சந்தோஷம்.