மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
தமிழ் சினிமாவின் சிக்ஸ்பேக் ஹீரோக்களில், பிட் ஆன பாடியுடன், இன்றைக்கு அசத்தி வருபவர் நடிகர் அருண் விஜய். என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த பிறகு, மார்க்கெட் பிக்கப் ஆகி, மீண்டும் பிசியாகி இருக்கிறார். அவர் அளித்த பேட்டி...
நீங்கள் புதிதாக நடித்து வெளி வர இருக்கும் படம் பற்றி?
இரண்டு நாட்களுக்கு முன், சினம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு இருக்கிறோம். படம் ரிலீஸ்க்கு ரெடியாக இருக்கிறது. விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. அடுத்து அக்னி சிறகுகள். மூடர் கூடம் நவீன் இயக்கத்தில், நானும் விஜய் ஆன்டனியும் நடித்து இருக்கிறோம். ரஷ்யா, கஜகஸ்தான் போன்ற நாடுகளில் எடுக்கப்பட்டுள்ளது.
ஓடிடி யில் படங்கள் ரிலீஸ் செய்வது குறித்து...?
அதுவும் ஒரு நல்ல பிளாட் பார்ம் தான். இருந்தாலும் தியேட்டரில் பார்க்கும் அனுபவம், அதில் கிடைக்காது. என் படங்கள் தியேட்டர்களில் தான் ரிலீஸ் ஆகும். அதுதான் என் விருப்பம். அதனால்தான் தியேட்டர் திறக்கும் வரை காத்திருந்து ரிலீஸ் செய்கிறோம். என் படங்கள் ஓடிடி யில் ரிலீஸ் ஆகாது.
என்னை அறிந்தால் படத்தின் விக்டர் கேரக்டருக்கு பிறகு, எப்படி கேரக்டரை தேர்வு செய்கிறீர்கள் ?
சினிமா ரசிகர்களிடம் என்னை நெருக்கமாக கொண்டு சேர்ந்தது விக்டர் கேரக்டர்தான். என்னை அறிந்தால் படத்துக்கு பிறகு ரசிகர்கள் என்னிடம் அதிகம் எதிர்பார்க்கின்றனர். அதனால் நான் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது. படங்களையும், கேரக்டரையும் மிகவும் கவனமாக தேர்வு செய்து நடிக்கிறேன்.
போலீஸ் கேரக்டரை தேர்வு செய்வதற்கு, விசேஷ காரணம் உண்டா?
குற்றம் 23 படத்துக்கு பிறகு சினம் படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்து இருக்கிறேன். எனக்கு வரும் கதைகள் பெரும்பாலும், துப்பறியும் திரில்லர் கதையாகவே இருக்கிறது. மக்களும் அதை விரும்புகின்றனர்.
ஹீரோ, வில்லன் இரண்டில் எது அதிகம்பிடித்திருக்கிறது?
ஹீரோ, வில்லன் இந்த இரண்டு கேரக்டரையும், மக்கள் ஏற்று கொண்டதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.இரண்டு கேரக்டரையும் விரும்பிதான் செய்கிறேன். ஆனால், வில்லன் ரோல் பண்ணும் போது, இன்னும் சிறப்பாக பண்ணலாம். அதற்கு எல்லை இல்லை. அதனால் வில்லன் ரோல் சேலஞ்சிங்காக இருக்கிறது. ஹீரோ, வில்லன் இரண்டையும் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
தொடர்ந்து வில்லன் கேரக்டர் செய்வதில் ஆர்வம் இருக்கிறதா?
கண்டிப்பாக நடிப்பேன். அது விக்டர் ரோல் மாதிரி இருக்க வேண்டும். கதையில் அந்த பாத்திரம் சவாலாக இருக்க வேண்டும். கேரக்டர் நல்லா இருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். குற்றம் 23 மற்றும் தடம் படங்கள் எல்லாம் அப்படித்தான் வெற்றி அடைந்தன.
மாபியா பார்ட் 1, பார்ட் 2 பற்றி...?
மாபியா பார்ட் 1 பண்ணும் போதே, பார்ட் 2 எடுக்க வேண்டும் என்று பேசினோம். படம் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் அது எனக்கு ரொம்ப பிடித்த படம். பார்ட் 2க்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனால் கண்டிப்பாக பார்ட் 2 வரும்.
பரியேறும் பெருமாள், அசுரன் போன்ற கதைக்களம் உள்ள படங்களை தேர்வு செய்வீர்களா?
அந்த மாதிரி கதைக்களம் உள்ள படங்களில், ஏற்கனவே நான் நடித்து இருக்கிறேன். ஜனனம், அன்புடன்,பாண்டவர் பூமி இந்த படங்கள் எல்லாம் அந்த மாதிரியான கதை களம் கொண்ட படங்கள்தான். மக்களோடு ஒன்றிய ஒரு கதை வந்தால், அதில் கண்டிப்பாக நடிப்பேன்.
எந்த இயக்குனர் படங்களில் நடிக்க வேண்டும் ஆசை இருக்கிறது?
இயக்குனர் சங்கர் படங்களில் நடிக்க ஆசை. அதுவும் நிறைவேறும் என நினைக்கிறேன்.
மணிரத்னம், கவுதம் மேனன் இவர்களின் இயக்கத்தில் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்களேன்?
கவுதம் மேனன் மல்டி டாஸ்கிங் டைரக்டர். சாதாரண சூழலை கூட, பிரமாண்டமாக காட்டும் ஆற்றல் உள்ளவர். அவருடைய விஷன் பிரமாதமாக இருக்கும். அதே போல், டயலாக்கும் பவர்புல்லாக இருக்கும். ரொம்ப பிராக்ட்டிக்கலானவர்.இயக்குவர் மணிரத்னத்தை பொறுத்தவரை, கதாபாத்திரங்களிடம் இருந்து என்ன வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு அதை வாங்குவார். ஒரு ஆர்ட்டிஸ்டின் எமோஷன், பீலிங்ஸ் எல்லாவற்றையும் ஒரு பிரேமுக்குள் கொண்டு வருவதில், அவருக்கு இணை அவர் மட்டும்தான்.