Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

ஆசைக்காக அரசியலுக்கு வரக்கூடாது: ஸ்ருதிஹாசன் பளிச்

11 அக், 2020 - 20:01 IST
எழுத்தின் அளவு:
Shruti-haasan-interview

கமல் என்ற மூன்று எழுத்து முத்து சினிமாவுக்கு தந்த அழகான சொத்து... நடிப்பு, நடனம், பாட்டு என தந்தை பத்தடி பாய்ந்தால் பதினெட்டு அடி பாய்ந்து கலக்கும் நவரச நாயகி... தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி திரைகளில் ரசிகர்களின் விழிகளை கவர்ந்திழுக்கும் ஸ்ருதிஹாசன் மனம் திறக்கிறார்...

* உங்கள் திருமணத்தை எப்போது எதிர்பார்க்கலாம் ?
தயவு செய்து இப்போதைக்கு எதிர்பார்க்காதீர்கள். எனக்கு அதில் தற்போது ஆர்வம் இல்லை. அதை பற்றி நான் யோசிக்கவே இல்லை. திருமணம் என்னோட பிளானில் இப்போது இல்லை

*சினிமாவில் நடித்துவிட்டு வெப்சீரிஸில் நடிப்பது ?
அக்கா சுஹாசினி போனில் கதை சொன்ன பிறகு வெப் சீரிஸ் ஒன்றில் கெஸ்ட் ரோலில் நடித்தேன். ஐதராபாத்தில் காட்சிகளை படமாக்கி அனுப்பினேன். ஓ.டி.டி., மதிப்பு கொரோனா சூழலில் தான் தெரியுது. ஆனால், ‛அவெஞ்சர்ஸ்' மாதிரி சவுண்ட் எபக்ட்டுடன் பார்த்தால் தான் செமயா இருக்கும்.

* அப்பா, அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டது
இரண்டு பேரோட நேர்மையும், கடின உழைப்புக்கும் அளவேயில்லை. அப்படி தான் நானும் இருக்கணும்னு நினைக்கிறேன்.

* அப்பாவின் அரசியல் நடவடிக்கையை நீங்கள்...
அரசியலில் எனக்கு அனுபவம் இல்லை... ஆசைக்காக இயக்குனர், அரசியல்வாதியாக ஆக கூடாதுனு ரொம்ப தெளிவாக இருக்கேன். இது இரண்டும் அடுத்தவர்களை பெரிய அளவுக்கு பாதிக்கும்னு நினைக்கிறேன்.

* பிரசாரம் செய்வதற்கு அப்பாவிற்கு உதவியாக....?
அவரது படம் பிரிமியர், இசைவெளியீட்டிற்கு போகாத நான் எப்படி அவர் பிரசாரத்திற்கு மட்டும் போவேன். அரசியலில் அப்பாவை சப்போர்ட் பண்றதெல்லாம் வீட்டோடு சரி

* ‛லாபம்' படத்தில் என்ன மாதிரியான கேரக்டர்?
பாப் பாடகி கேரக்டரில் தைரியமான பெண்ணாக நடிக்கிறேன். சமூக வலைதளங்களில் எனக்கான ரசிகர்கள் கூட்டம், என்னை சுற்றி பல விஷயங்கள் நடப்பது என ஒரு பவர்புல் கேரக்டரை, இயக்குனர் ஜனநாதன் கொடுத்திருக்கிறார்.

* ‛லாபத்தில்' விஜய் சேதுபதியுடன் நடிப்பு அனுபவம் ?
அவரோடு நடிக்கிறது நல்ல அனுபவங்களை கொடுத்திருக்கு. சேதுவுடன் நானும் இந்த மாதிரியான சமூகத்திற்கு தேவையான கதையில் பயணிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

* ‛அவள் அப்படி தான்' படத்தில் நீங்க நடிக்க போறீங்களா?
அப்படி ஒரு பேச்சு நடந்துட்டு இருக்கு... எனுக்கு பிடித்த உணர்வுப்பூர்வ படங்களில் இதுவும் ஒன்னு. அது எப்படி எப்போது என்று என்னால் இப்போ சொல்ல முடியலை.

*கொரோனா சூழலில் படப்பிடிப்பு நடத்துவது எப்படி இருக்கு ?
ரொம்ப பயமா இருக்கு... கொரோனாவை பொறுத்தவரை ஜாதி, மதம், மொழி பார்த்து வராது. எளிதில் பரவும் நோய் என்பதால் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டி இருக்கு

*ஏன் தமிழில் இப்போ தொடர்ந்து படங்கள் பண்றது இல்லை
சில படங்கள் மக்கள் ரசிக்கல. நானும் ரசிக்கல என்று சொல்லலாம். பண்ணது பண்ணியாச்சி. இனி கொஞ்சம் பிடிக்கிற மாதிரி படம் பண்ணலாமேனு தான் வெயிட் பண்றேன்.

* தியேட்டரில் 50 சதவீதம் அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் பற்றி
எப்படி எஞ்களுக்கு லாம் கிடைக்கும்... தியேட்டர்காரர்களுக்கு, வட்டிக்கு கடன் வாங்கி படம் எடுக்கும் தயரிப்பாளர்களுக்கு கஷ்டம். கொரோனா சினிமா தொழிலை மட்டுமல்ல எல்லா தொழிலையும் பாதிச்சிருக்கு

*இதுவரைக்கும் உங்களுக்கு கிடைத்த சினிமா அனுபவம்
ஆரம்பத்துல எனக்கு சினிமா என்னன்னு புரிந்து கொள்ள கொஞ்ச நாளாச்சு. ஆனால், இன்றைய சினிமாவில் புதிதாக வர்றவங்க திறமைசாலியா இருக்காங்க. யார் கிட்ட எப்படி பேசணும் எப்படி நடந்துக்கணும் தெரிஞ்சு வைச்சிருக்காங்க.

*தங்கை அக்ஷரா உதவி இயக்குனராக வேலை பார்த்தவர், எதிர்காலத்தில் உங்களை வைத்து படம் இயக்குவாரா?
இதுவரை என்ன கூப்பிடல, நீங்கதான் கேட்டு சொல்லணும்.

*ஒருவரின் சுயசரிதை படங்களில் நடிக்க ஆர்வம் இருக்கா?
என் முகத்திற்கு யாருடையது செட் ஆகும். எனக்கு தெரியல நீங்களே சொல்லுங்க, யாருடைய கதையில் நடித்தால் எனக்கு பொருத்தமாக இருக்கும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அந்த ரகசியத்தை சொன்னால் லோகேஷ் கொன்றே விடுவார் - மாளவிகா மோகனன்அந்த ரகசியத்தை சொன்னால் லோகேஷ் ... ஜப்பானில் 'சில்லுக்கருப்பட்டி!' ஜப்பானில் 'சில்லுக்கருப்பட்டி!'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in