Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

அதிசயங்கள் நிறைந்த ஜீன்ஸ் - 22 ஆண்டுகளை கடந்து நிற்கும் நினைவுகள்

27 ஏப், 2020 - 12:01 IST
எழுத்தின் அளவு:
22-Years-of-Jeans

ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்பார்கள். அவரின் ஒவ்வொரு படத்திலும் ஒரு பிரம்மாண்டத்தை படத்திற்கு படம் காண்பித்தார். அதேப்போல் அவர் எடுக்கும் ஒவ்வொரு படத்தின் கதைக்களமும் வித்தியாசமாக இருக்கும். ஜென்டில்மேன், காதலன், இந்தியன் படத்திற்கு பின் ஷங்கர் இயக்கிய படம் ஜீன்ஸ். இரட்டையர்களின் கதையுடன் காதல், குடும்ப உறவுகளை பற்றி அழகாக சித்தரித்த படம். அதோடு உலக அதிசயங்களை ஒரே பாட்டில் ஒன்றாக காண்பித்த பெருமையும் இந்தப்படத்திற்கு உண்டு. படத்தின் கிளைமாக்ஸில் வரும் டைனோசர் அன்றைய காலத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

படத்தின் நாயகனாக பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்தார். அவருக்கு ஜோடியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்தார். ஐஸ்வர்யா தமிழில் அறிமுகமானது இந்தப்படத்தில் தான். ஆனால் மணிரத்னத்தின் இருவர் படம் முதலில் வந்ததால் ஐஸ்வர்யாவுக்கு அது முதல்படமாகி போனது. இவர்கள் தவிர நாசரும் இரட்டை வேடத்தில் பிரசாந்த்தின் அப்பாவாக நடித்திருந்தார். ராதிகா, செந்தில், லட்சுமி, எஸ்.வி.சேகர், ராஜுசுந்தரம் ஆகியோரும் முக்கிய வேடம் ஏற்றிருந்தனர். இப்படம் வெளியாகி 22 ஆண்டுகளை கடந்த நிலையில் அந்தப்படம் பற்றிய நினைவுகளை பிரசாந்த், உதவி இயக்குனர்களாக பணிபுரிந்த ஹோசிமின் மற்றும் மாதேஷ் நினைவு கூர்ந்ததை இங்கு பார்க்கலாம்.
பிரசாந்த் கூறுகையில், அரவுண்ட் தி வேர்ல்டு இன் 80 டேஸ் என்று ஒரு புகழ்பெற்ற புத்தகம் இருக்கு. அதை நிறைய பேர் படித்திருப்பார்கள் நானும் படித்தேன். ஆனால் என் வாழ்க்கையில் அதிசயங்கள் நிறைந்த இடத்தை சுத்தி பார்ப்பேன் என்று நினைத்து கூட பார்த்தது கிடையாது. என் திரையுலக பயணத்தில் முக்கியமான படமாக இதை நான் நினைக்கிறேன். இதற்காக ஷங்கருக்கு நன்றி. அவரால் மட்டுமே இது சாத்தியமாகும். மனிதர்களால் உருவாக்கப்பட்ட அந்த ஏழு அதிசயங்களில் பூவுக்குள் ஒளிந்திருக்கும் என்ற பாடல் படப்பிடிப்பு நடந்தது. இன்னும் அந்த பாடல் எடுத்த காட்சி மட்டும் என் மனதில் இருக்கிறது.
சென்னையில் படப்பிடிப்பை தொடங்கி சீனா, ஆக்ரா, எகிப்து, ரோம், இத்தாலி, பாரிஸ், அமெரிக்கா என ஒவ்வொரு லொகேஷனில் மூன்று நாட்கள் தங்கி படம் எடுத்தோம். சென்னையிலிருந்து இயக்குனர், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள் உட்பட 50 பேர் கிளம்பி சென்றோம். ஒவ்வொரு ஊரிலும் அங்கு இருக்கும் உதவியாளர்களை அழைத்து கொண்டோம். அந்த பாடல் முடியும் வரை பயணத்திலேயே பாதி நாட்கள் சென்றன. தூங்க, சாப்பிட கூட யாருக்கும் நேரம் இல்லை. இதற்கிடையே சீனாவில் பாடலுக்கான என்னுடைய உடைய காணாமல் போய், திரும்ப அதை கண்டுபிடித்தது தனிக்கதை.
ஐஸ்வர்யா ராய்க்கு இந்த படம் தான் தமிழில் அறிமுகம். அவருக்கு தமிழ் தெரியாது. ஆனால் கடினமாக உழைக்க கூடிய ஒரு நடிகை. இப்போதும் அவர் என்னுடன் நட்பில் இருக்காங்க. அடுத்து, ஷங்கர் பற்றி நான் சொல்லியே ஆகணும். ஒரு நடிகர் கிட்ட எப்படி வேலை வாங்கணும்னு நன்றாக தெரிந்த இயக்குனர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒட்டுமொத்த நடிகர்களும் இருப்பாங்க. ஒவ்வொருவரிடமும் எப்படி நடிக்கணும், எப்படி பேசணும் தனித்தனியாக சொல்லி காண்பித்தார். எந்த இடத்திலும் காம்பரமைஸ் ஆகாதவர். தான் நினைத்தபடி படப்பிடிப்பை நடத்தியே தீருவார். அதேசமயம் நடிகர்களிடம் நண்பர் போல் பழகக்கூடியவர்.

உதவி இயக்குனராக வேலை பார்த்த இயக்குனர் ஹோசிமின் கூறுகையில், ஜீன்ஸ் படத்தில் பணிபுரிந்தது மறக்க முடியாத ஒரு அனுபவம். அப்போது நான் ஒரு பத்திரிக்கையில் வேலை பார்த்துவிட்டு ஷங்கரிடம் உதவி இயக்குனராக சேர்ந்த சமயம். பிரசாந்திடம் எனக்கு நல்ல நட்பு இருந்தது. ஐஸ்வர்யா ராய்க்கு தமிழ் தெரியாது என்பதால் அவருக்கு வனசங்களை ஹிந்தியில் நான் தான் சொல்லி கொடுத்தேன். எளிமையாக பழகக்கூடியவர், கடன உழைப்பாளி ஐஸ்வர்யா ராய்.
இனி யார் நினைத்தாலும் அந்த மாதிரி 7அதிசயங்களில் படப்பிடிப்பு நடத்த முடியுமா என்பது சந்தேகமே. இதற்காக நாங்கள் குழு அமைத்து, பல்வேறு ஆராய்ச்சி செய்து அந்த அதிசயங்களை தேர்ந்தெடுத்தோம். இதில் பெரும்பாலும் நான் தேர்ந்தெடுத்தவை. பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் என்ற பாட்டில் ஹஜ்ஜிபா என்று ஒரு வார்த்தை வரும். அதற்கு அதிசயம் என்று பொருள். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் போது அதை அழகாக பாட்டின் இடையே பயன்படுத்தியிருந்தார். ஆக்ராவில் தாஜ்மஹாலில் பாடல் காட்சி படப்பிடிப்பு எடுத்த சமயத்தில் தான் ரஹ்மானின் வந்தே மாதரம் ஆல்பம் ரிலீஸ் ஆகியிருந்தது. 1998-ல் இந்தியா கேட்டில் நானும், பிரசாந்தும் விடிய விடிய அந்த பகுதியில் இருந்தோம் என்பதை இப்போதும் நினைத்து பார்க்கிறேன். பிரசாந்த் நடிகராக இருக்க மாட்டார், அனைவரிடமும் நண்பராக பழகும் குணம் கொண்டவர். என்னைவிட இயக்குனர் மாதேஷ் இந்த படக்குழுவினருடன் மிகவும் நெருக்கத்தில் இருந்தார் என்றார்.
மாதேஷ் கூறுகையில், ஷங்கரின் ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் ஆகிய படங்களில் கோ டைரக்டராக வேலை பார்த்துள்ளேன். இவற்றில் ஜீன்ஸ் படம் தான் சவாலாக இருந்தது. ஷங்கரின் கோ டைரக்டர் என்பதால் அவர் நினைப்பதை அப்படியே திரையில் கொண்டு வரணும். அதனால் அவருக்கும் மேல என் பணி அதிகமாக இருந்தது. படத்தில் இரண்டு இரண்டு கேரக்டர், அதனால் இரு முறை படப்பிடிப்பு நடத்தியது போன்ற உணர்வு. இதை எல்லாவற்றையும் விட 22 ஆண்டுகளுக்கு முன்பே ஏழு உலக அதிசயங்களை படம்பிடித்தோம். இனி யாருமே நினைத்துப் பார்க்கக் கூட முடியாத ஒரு வாய்ப்பு. இந்த மாதிரி லோகேஷனில் பாடல் எடுக்கலாம் என பேசும்போதே நாங்கள் பிரமித்து பார்த்தோம். இது சாத்தியமா என்று கூட தோன்றியது. ஆனால் திட்டமிட்டு ஒவ்வொரு விஷயங்களை பார்த்து பார்த்து செய்ததால் முடிந்தது. அந்தப் பாடலை இப்போதும் திரையில் பார்க்கும் போது பிரம்மாக உள்ளது.
பிரசாந்த், நாசர், ஐஸ்வர்யா என இரண்டு இரண்டு கேரக்டர்கள் வரும் போது ஹேர்ஸ்டைல், உடை என எல்லாவற்றையும் சரியாக செய்து, பார்த்து பார்த்து படமாக்கினோம். 22 ஆண்டுகளுக்கு முன்பே தொழில்நுட்ப ரீதியாக பெரிய வளர்ச்சி இல்லாத சமயத்தில் அந்த படத்தை வியக்கும்படி படமாக்கினோம். அதற்கு காரணமே ஷங்கர் தான். 7 அதியசங்கள் படமாக்கியபோது பைசா டவர் காட்சிகள் தான் சிரமமாக இருந்தது. ஐஸ்வர்யா ராய்க்கு முதல் கமர்ஷியல் படம், கலர்புல்லாக சிறப்பாக அமைந்தது. உலக அழகி என அவரை தூக்கி வைத்து கொண்டாடிய சமயத்தில் தான் இந்த ஜீன்ஸ் படம் வந்தது. ஷங்கர் சொன்னால் நாம் செய்து காட்டணும் என்ற ஒரு வேகம் நமக்குள் வந்துவிடும். அவ்வளவு திறமையான மனிதர் என்றார்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
எப்படி இருந்த சாலிகிராமம், அருணாச்சலம் சாலை இப்படி ஆனதே...!எப்படி இருந்த சாலிகிராமம், ... அஜித் எனும் வலிமை : அறிந்ததும், அறியாததும்... - பிறந்தநாள் ஸ்பெஷல் அஜித் எனும் வலிமை : அறிந்ததும், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

David DS - kayathar,இந்தியா
29 ஏப், 2020 - 22:55 Report Abuse
David DS பாவம் உலக அதிசயங்களை உருவாக்கியவர்கள். அங்கெ ஜஸ்ட் ஷூட்டிங் எடுத்து விட்டு உலக அதிசயங்களை உருவாக்கியது போல அல்லவா சீன் போடுகிறார்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in