Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

கொரோனா ஊரடங்கு ; எங்களுக்கு யாரும் உதவல - பெண் உதவி இயக்குனர்கள் குமுறல்

19 ஏப், 2020 - 11:16 IST
எழுத்தின் அளவு:
Assistant-Women-Directors-are-also-troubled-during-corono-lockdown

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல துறைகள் முடங்கியுள்ளன. அதில், நாள்தோறும் இயங்கிக் கொண்டிருக்கும் திரைத்துறையும் ஒன்று. பெரும்பாலும் ஆண் ஆதிக்கம் அதிகம் நிறைந்த இந்த துறையில் நடிகைகள் தவிர்த்து சினிமாவில் இன்னும் பல துறைகளில் பெண்கள் சாதித்து வருகின்றனர். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆண் தொழிலாளர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று பல வகைகளில் உதவி பெற்றுவிடுகிறார்கள். ஆனால் பெண் உதவி இயக்குனர்கள் எப்படி இதை சமாளிக்கிறார்கள் என்று சிலரை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர்களின் குரல்கள் இங்கே...


எங்கள் நிலை மோசமாகத்தான் உள்ளது - ஹர்ஷா
என் சொந்த ஊர் மும்பை. சென்னைக்கு வந்து பத்து வருஷமாச்சு. ஜோதிகா நடித்த மகளிர் மட்டும் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினேன். விளம்பர படங்கள் உட்பட இன்னும் நிறைய படங்களில் வேலை பார்த்துள்ளேன். இப்போது கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் ஒரு படத்தில் வேலை பார்க்கிறேன். பெரும்பாலும் பெண் உதவி இயக்குனர்களுக்கு காஸ்ட்யூம் அல்லது ஹேர் ஸ்டைல், மேக்கப் மாதிரியான வேலையை தான் கொடுப்பார்கள். எங்களுக்கு சம்பளமும் லட்சங்களில் இருக்காது, சில ஆயிரங்கள் மட்டும் தான் கிடைக்கும். நான், சோழிங்கநல்லூரில் உள்ளேன். நான் பெறும் சம்பளம் என் கார் செலவுக்கு கூட பத்தாது. இன்னும் வீட்டு வாடகை உட்பட பல பிரச்னை இருக்கு.
கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே உள்ளேன். இந்தகாலக்கட்டத்தில் ஒரு கதையை தயார் செய்து வருகிறேன். மும்பையில் கடைசியாக ஒரு படத்தில் வேலை பார்த்தேன். அதில் கிடைத்த பணத்தை வைத்து இப்போது சமாளிக்கிறேன். இன்னும் கொஞ்ச நாளில் சிரமத்துக்கு உள்ளாகி விடுவேன். என் குடும்பம் மும்பையில் உள்ளது. தம்பி தான் பெற்றோர்களை பார்த்து வருகிறான். நான் அவர்களை தொந்தரவு செய்வது இல்லை. இங்கே சில உதவி இயக்குனரின் நிலை மோசமாகத்தான் உள்ளது. பெண்களுக்கு எப்போதும் போராட்டம் தான். இந்த துறையில் நானும் கண்டிப்பாக ஜெயிப்பேன். இது வரை எந்த சங்கத்தினரும் எங்களுக்கு உதவவில்லை. யாருக்கும் உதவி வேணுமா என்று கூட கேட்கவில்லை. இது தான் உண்மை என்றார்.


மே-க்கு பிறகு நிச்சயம் கஷ்டம் தான் - பார்கவி
சினிமாவில் 10 ஆண்டுகளாக உள்ளேன். சொந்த ஊர் சென்னை தான். இயக்குனர்கள் ராஜேஷ், விஜய் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். சமீபத்தில் வந்த ஆதித்ய வர்மா படத்திலும் வேலை பார்தேன். நான்கு ஆண்டுகளாக உதவி இயக்குனராக இருந்தாலும் எந்த சங்கத்திலும் நான் உறுப்பினராக இல்லை. இங்கு ஆண் அல்லது பெண் உதவி இயக்குனராக இருந்தாலும் தினசரி பேட்டாவில் தான் சாப்பிடணும். அதில் தான் குடும்பத்தையும் பார்த்துக்கணும். அப்பா டப்பிங் ஆர்ட்டிஸ்ட் காளிதாஸ். அவருக்கும் இப்போது வேலை இல்லாததால் கொஞ்சம் கஷ்டத்தில் உள்ளோம். உதவி கேமராமேன் ஒருவரை ஜுன் மாதம் திருமணம் செய்ய இருந்தேன். கொரோனாவால் இப்போது தள்ளி வைத்துவிட்டோம்.
என் சேமிப்பை வைத்து எப்படியும் ஏப்ரல் மாதம் வரை குடும்பத்தை பார்த்துக் கொள்ளலாம். மேக்கு பிறகு தான் கண்டிப்பாக சிக்கல் இருக்கும். படப்பிடிப்புக்கு போனால் தான் காசு கிடைக்கும். ஆனால் இப்போதைய சூழலில் ஜுன், ஜுலையில் தான் நிலைமை சரியாகும் என்கிறார்கள். அப்போது கூட நடிகர்கள் படப்பிடிப்புக்கு வருவார்களா என தெரியவில்லை. இதுவரை யாரும் எங்களுக்கு உதவவில்லை. நாங்களே தான் எங்களை பார்த்து கொள்கிறோம். இப்போதைக்கு யாரிடமும் உதவி கேட்க முடியாது. நவம்பருக்கு பிறகு எனக்கு வேறு வாய்ப்பும் இல்லை. டப்பிங் யூனியனில் இருந்து அரிசியும், ரூ.500 பணமும் தந்தார்கள். வேறு எந்த சங்கத்திலும் உதவி பெறவில்லை. நான் உட்பட பெண் இயக்குனர்கள் யாரும் உறுப்பினர்களாக இல்லை. அது தான் பிரச்னை. இந்த நிலை சீக்கிரம் மாறும். இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு கதையை தயார் செய்து வருகிறேன். அதில் தான் என் முழுகவனமும் உள்ளது. என் எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என இப்போது எதுவும் சொல்ல முடியாது என்றார்.


நாங்களும் தினக்கூலிக்காரங்க தான் - கவித்ரா
ஏழு வருஷமா இந்த துறையில் இருக்கேன். கடைசியாக மெட்ராஸ் டாக்கீஸ் தனம் இயக்கத்தில் வந்த வானம் கொட்டட்டும் படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்தேன். படம் முடிந்ததால் ஒரு மாதம் ஓய்வில் இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அது அதையும் கடந்து போய் கொண்டு இருக்கிறது. கணவர், குடும்பம் எல்லோருமே சென்னையில் இருக்கோம். அதனால் எனக்கு பெரிய பிரச்னை இல்லை. வெளியூரிலிருந்து சினிமாவுக்காக சென்னை வந்தவர்கள் நிலைமை தான் கஷ்டமாக உள்ளது. சிலர் சொந்த ஊருக்கு போயிட்டாங்க, சிலர் இங்கேயே இருக்காங்க.
இயக்குனர்கள் சங்கத்தில் 1000 பேர் உறுப்பினர்களாக இருந்தால் அதில் குறைந்தது100 பெண்களாவது இருப்பாங்க. பெரும்பாலும் அவர்களிடம் உறுப்பினர் அட்டை இருக்காது. 25 ஆயிரம் கொடுத்து நான் மெம்பர் சிப்கார்டு எடுத்தேன், ஆனால் நாற்பதாயிரம் கட்டணும்னு சொல்லிட்டாங்க. என்னால் அவ்வளவு பணம் ரெடி பண்ண முடியல, விட்டுவிட்டேன். அந்த கார்டு இருந்திருந்தால் ஏதாவது உதவி கிடைத்திருக்கும். இப்போதைக்கு யாரும் உதவவில்லை.

இயக்குனர்கள் ஷங்கர், முருகதாஸிடம் மட்டும் தான் பெண் உதவி இயக்குனர்கள் இருக்க மாட்டாங்க. மற்ற அனைவரிடமும் என் போன்றவர்கள் வேலை பார்ப்பாங்க. எங்களுக்கான சம்பளம் ரொம்ப குறைவு தான். தினசரி வாங்குற பேட்டாவில் தான் சாப்பிடணும், பெட்ரோல் போடனும், குடும்பத்தையும் பார்த்து கொள்ளணும். ரிஸ்க்கான வேலை தான் இது. சினிமா மீது இருந்த காதலால் மட்டும் தான் இந்த துறையில் இருக்க முடியும். இப்போது ஒரு கதை எழுதலாம் என எண்ணியுள்ளேன். பெப்சியோ அல்லது இன்னும் பிற அமைப்புகளோ எங்களுக்கும் எதுவும் உதவவில்லை. அது கிடைத்தால் கொஞ்சம் உதவியாக இருந்திருக்கும் என்றார்.


பீரிலான்சர்ஸ் போல வேலை பார்க்கிறோம் - ஸ்ருதி
எனக்கு சொந்த ஊர் சென்னை தான். 2011 - 2015 வரை இயக்குனர் ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அதன் பிறகு நிறைய விளம்பரப் படங்களில் வேலை பார்த்தேன். இப்போது நானே தனியாக நிறைய விளம்பர படங்கள் எடுத்து தருகிறேன். நானும் எந்த சங்கத்திலும் உறுப்பினராக இல்லை. அதனால் எந்த உதவியும் கிடைக்கவில்லை. என் போன்று நிறை பெண் உதவி இயக்குனர்கள் பீரிலான்சர்ஸ் போல தான் வேலை பார்க்கிறோம். எனக்கு கொஞ்சம் எடிட்டிங்கும் தெரியும். பாடகர்கள் அனுப்புற வீடியோவை எடிட் பண்ணி கொடுக்கிறேன்.
நிறைய பேர் உதவி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். நான் என்னால் முடிந்த உதவியை செய்ய முயற்சிக்கிறேன். நண்பர்கள் மூலம் சமூகவலைதளங்களில் பதிவு செய்து உதவி பெறுகிறோம். இங்கே ஹாஸ்டலில் தங்கியிருக்கும் நண்பர்கள் சிலருக்கு எங்களது வீட்டில் இருந்து சமைத்து கொடுத்து என்னால் முடிந்த உதவியை செய்கிறேன். உடனே கதை எழுதனும் என என்னால் மிஷின் போல் இயங்க முடியாது. கதை என்று மனசுல உட்காரணும். அப்போது தான் எழுதுவேன். நிறைய வெப்சீரிஸ் பார்க்கிறேன். எல்லாவற்றுக்கும் ஒரு டைம் வரும் என்கிறார்.


சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டிருப்பேன் - பிரியதர்ஷினி

மீடியாவில் இருந்து சினிமாவுக்கு வந்தேன். வானம் கொட்டட்டும் படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்தேன். பிறகு மாஸ்டர் படத்தில் மாளவிகாவுக்கு தமிழை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து கொடுக்கு வேலை பார்த்தேன். அவருக்கு தமிழ் தெரியாததால் ஹிந்தியில் சொல்லிக் கொடுத்தேன். கிட்டத்தட்ட 20 நாட்கள் டில்லியில் நடந்த படப்பிடிப்பில் அவருடன் இருந்து வேலை பார்த்தேன். என் சொந்த ஊர் ஓசூர். ஊரடங்கு ஆரம்பிக்கும் முன்பே என் சொந்த ஊருக்கு வந்து குடும்பத்தோடு சேர்ந்துவிட்டேன்.
சென்னையில் இருந்திருந்தால் கண்டிப்பாக நானும் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு இருப்பேன். நானும் இன்னும் உறுப்பினராக இயக்குனர் சங்கத்தில் சேரவில்லை. நான் இன்னும் முழுமையாக உதவி இயக்குனராக வேலை பார்க்கவில்லை. பீரிலான்சர் போன்றே வேலை பார்த்து வருகிறேன். நிறைய விளம்பரங்கள் பண்ணுகிறேன். எங்களை போன்று வேலை பார்ப்பவர்களுக்கு யாரும் எந்த சலுகையும் கொடுப்பது இல்லை. எந்த சங்கத்திலிருந்து யாரும் எதுவும் உதவி வேண்டுமா என கேட்கவில்லை. இப்போது ஒரு கதை தயார் செய்து வருகிறேன். சினிமாவுக்கு வந்துவிட்டால் அதில் வெற்றி பெற்று தான் வெளியே வரணும் என்ற எண்ணம் வரும். அந்த மனநிலையிலேயே நான் வேலை பார்த்து வருகிறேன். ஆசைகள் நிறைய இருக்கு, பார்க்கலாம் என்கிறார்.
உறுப்பினர் ஆனால் மட்டுமே உதவி - ஆர்.வி.உதயகுமார்
உதவி பெண் இயக்குனர்கள் பற்றி இயக்குனர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.வி.உதயகுமாரிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், இயக்குனர்கள் சங்கத்தில் 2400 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் சிலர் முறைப்படி உறுப்பினர்கள் கார்டு பெறவில்லை. ஏதாவது பிரச்னை வந்தால் மட்டுமே உறுப்பினர்கள் கார்டு பற்றி யோசிக்கிறார்கள். மற்றபடி எந்த முயற்சியும் அவர்கள் எடுப்பதில்லை. 2014 முதல் நான் நலவாரியத்தில் இருக்கிறேன். ஆனால் பலரும் அதிலும் உறுப்பினர்களாக சேர தயாராகவில்லை. சுமார் 500 பேர் உறுப்பினர்களுக்கான எந்த அங்கீகாரமும் இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம். வருங்காலத்தில் அவர்கள் சங்கத்தில் உறுப்பினராக சேர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். உறுப்பினர்களாக சேர்ந்தால் மட்டுமே அவர்களுக்கான அங்கீகாரமும், உதவிகளும் போய் சேரும். உறுப்பினர்கள் அல்லாத யாராக இருந்தாலும், எத்தனை ஆண்டுகள் அவர்கள் சினிமாவில் வேலை பார்த்து இருந்தாலும் அவர்களுக்கு எந்த உதவி செய்ய முடியாது என்றார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மார்ச் மாதப் படங்கள் : பாதியில் முடிந்த வெளியீடுகள்மார்ச் மாதப் படங்கள் : பாதியில் ... எப்படி இருந்த சாலிகிராமம், அருணாச்சலம் சாலை இப்படி ஆனதே...! எப்படி இருந்த சாலிகிராமம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Oru Indiyan - Chennai,இந்தியா
20 ஏப், 2020 - 01:34 Report Abuse
Oru Indiyan இங்கு பதிவு செய்து உள்ள அனைவரும் ,இயக்குனர் சங்கம் சேர்ந்த "ஆணும்" , ஆணாதிக்க கருத்து பதிவு செய்து உள்ளனர். இவர்கள் சங்க உறுப்பினர்கள் இல்லையென்றால் இவர்களை ஏன் உதவி இயக்குனர்களாக பணி புரிய அனுமதித்தார்கள்?. கோடி கணக்கில் சம்பளம் பெறும் ஆண் இயக்குனர்கள் இவர்களுக்கு உதவலாமே?
Rate this:
baluchen - Chennai ,இந்தியா
19 ஏப், 2020 - 23:54 Report Abuse
baluchen என்ன வில்லி சீரியல் மற்றும் கலாச்சார சீர்கேடு படம் தானே எடுக்க போறீங்க? பரவால்ல சும்மாவே இருங்க...
Rate this:
19 ஏப், 2020 - 20:42 Report Abuse
susainathan what she gave a comment her salarys they getting from there industry not adjust her petroleum allowance then how she got a car?
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
19 ஏப், 2020 - 18:23 Report Abuse
Pannadai Pandian கோடி கோடியா சம்பாதிக்கும் சமயத்தில் ஊருக்கு கொடுப்பாயா ???
Rate this:
S. Narayanan - Chennai,இந்தியா
19 ஏப், 2020 - 15:05 Report Abuse
S. Narayanan சினிமா வளரணும்னு யாரும் நெனைக்கலயா.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Aranmanai 3
  • அரண்மனை 3
  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in