Advertisement

சிறப்புச்செய்திகள்

என் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

மார்ச் மாதப் படங்கள் : பாதியில் முடிந்த வெளியீடுகள்

15 ஏப், 2020 - 13:57 IST
எழுத்தின் அளவு:
Corona-effect---March-month-movies-closed

2020ம் ஆண்டின் சோகமான மாதங்களாக மார்ச், ஏப்ரல் மாதம் இடம் பிடித்துவிட்டன. இது, மே மாதத்திலும் தொடருமா என்பது அப்போதுதான் தெரிய வரும். கொரானோ அச்சம் காரணமாக முதலில் தியேட்டர்களைத்தான் மூடினார்கள். கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன.

மார்ச் மாதத்தில் 6ம் தேதியும் 13ம் தேதியும் மட்டுமே படங்கள் வெளியாகின. மார்ச் மாதம் வந்த நான்கு வெள்ளிக்கிழமைகளில் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே படங்கள் வெளியாகின.

மார்ச் 17ம் தேதி முதல் 'கொரானோ' அச்சம் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களை மூடுவதாக அரசாங்கம் அறிவித்தது. அதனால், மூன்றாவது வெள்ளிக்கிழமையான மார்ச் 20ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட சுமார் 10 படங்களின் வெளியீடு அப்படியே நின்று போனது. அந்தப் படங்கள் எப்போதைக்கு வெளிவரும் என்பதை இப்போது சொல்ல முடியாது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு 21 நாட்கள் விதிக்கப்பட்டதால், மார்ச் 27ம் தேதியும் படங்கள் வெளிவரவில்லை. இப்போது ஊரடங்க மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஏப்ரல் மாதம் முழுவதும் திரைப்பட வெளியீடு இல்லாத மாதமாகிவிட்டது.

மார்ச் மாதத்தில் 6ம் தேதியன்று, “காலேஜ்குமார், ஈவர் கரவது, எட்டுத்திக்கும் பற, ஜிப்ஸி, இந்த நிலை மாறும், வெல்வெட் நகரம்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் ஒரு படம் கூட வெற்றி பெறவும் இல்லை, தியேட்டர்கள் அரங்கம் நிரம்பி ஓடவும் இல்லை.

மார்ச் 13ம் தேதியன்று, “அசுரகுரு, தாராள பிரபு, கயிறு, வால்டர்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'தாராள பிரபு' படத்திற்கு ஓரளவிற்கு சிறப்பான விமர்சனங்கள் கிடைத்தன. அதனால் இந்தப் படம் ஓடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் அடுத்த நான்கு நாட்களில் கொரானோ அச்சம் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இந்தப் படத்தின் வசூலும் எதிர்பார்த்தபடி அமையவில்லை. இருப்பினும் 21 நாள் ஊரடங்கு முடிவதற்குள் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் நல்ல விலைக்கு விற்று பணம் பார்த்துவிட்டார்கள். படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் தான் பாவம். மீண்டும் படத்தை வெளியிட்டு இழந்த பணத்தைப் பெறவும் முடியாது. தயாரிப்பாளருக்கு மட்டும் தான் லாபத்தைக் கொடுத்தது இப்படம். மற்ற படங்கள் அந்த நான்கு நாட்களில் கூட வசூலை அள்ளவில்லை.

மார்ச் 20ம் தேதியன்று “காக்டெய்ல், எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும், ஞானச்செருக்கு, கன்னி ராசி, காவல்துறை உங்கள் நண்பன், மரிஜுவானா, பல்லு படாம பாத்துக்க, புறநகர், சூடு, டைம் இல்ல” ஆகிய படங்களை வெளியிடப் போவதாக விளம்பரப்படுத்தி வந்தார்கள். ஆனால், 17ம் தேதியே தியேட்டர்களை மூடிவிட்டதால் இந்தப் படங்கள் வெளிவர முடியவில்லை. இப்போது மே 3ம் தேதி உரை தேசிய ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டால் தங்கள் படங்களுக்குத்தான் முன்னுரிமை தரவேண்டும் என இத்தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அது நிறைவேறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமா வரலாற்றில் இதற்கு முன் இப்படி ஒரு மாதத்திற்கும் மேலாக தியேட்டர்களை அரசே மூடச் சொன்னதாக வரலாறு இருந்திருக்க வாய்ப்பில்லை. மே 3க்குப் பிறகும் தியேட்டர்கள் திறக்கப்படுமா என்பது சந்தேகம்தான். ஜுன் அல்லது ஜுலை மாதம் வரை தியேட்டர்களை மூடியிருப்பது தொடரும் என்கிறார்கள்.

இந்த 2020ம் வருடத்தைப் பொறுத்தவரையில் திரையுலகத்திற்கு இப்படி ஒரு இழப்பு வரும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டதால் திட்டமிட்டபடி அவை முடிந்து, இந்த வருடத்தில் வர வேண்டிய படங்களின் வெளியீடுகள் கூட அடுத்த வருடத்திற்குத் தள்ளிப் போக வாய்ப்புகள் உள்ளது.

சினிமாவை விட அனைவரும் சீரும், சிறப்புமாய் வாழ்வதே முக்கியம். அதனால், சில இழப்புகளை வலியுடன் தாங்கிக் கொள்ள வேண்டிய சூழல் அனைவருக்கும் வந்துவிட்டது.

மார்ச் மாதம் வெளிவந்த திரைப்படங்கள்

மார்ச் 6 : காலேஜ்குமார், ஈவர் கரவாது, எட்டுத்திக்கும் பற, ஜிப்ஸி, இந்த நிலை மாறும்

மார்ச் 13 : அசுரகுரு, தாராள பிரபு, கயிறு, வால்டர்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டிஜிட்டல் தளத்தில் சினிமா : தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்களுக்கு வரமா... சாபமா...!டிஜிட்டல் தளத்தில் சினிமா : ... கொரோனா ஊரடங்கு ; எங்களுக்கு யாரும் உதவல - பெண் உதவி இயக்குனர்கள் குமுறல் கொரோனா ஊரடங்கு ; எங்களுக்கு யாரும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in