Advertisement

சிறப்புச்செய்திகள்

என் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

டிஜிட்டல் தளத்தில் சினிமா : தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்களுக்கு வரமா... சாபமா...!

14 ஏப், 2020 - 15:15 IST
எழுத்தின் அளவு:
Cinemas-in-Digital-Platform-:-What-producers-and-Theatre-owners-said?

கொரோனாவால் உலகமே ஆடிப்போய் உள்ளது. இந்தியாவிலும் இது பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் பல துறைகளும் முடங்கி கிடக்கின்றன. குறிப்பாக மக்களின் பொழுதுபோக்கு தளங்களில் முதன்மையாக இருக்கும் சினிமாவும் முடங்கி உள்ளது. படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தியேட்டர்கள் மூடிக்கிடப்பதால் சின்ன படங்கள் முதல் பெரிய படங்கள் வரை அதன் தயாரிப்பாளர்கள் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். படத்திற்காக வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியாமலும் உள்ளனர்.

தற்போதைய சூழலில் மே மாதத்திற்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா அச்சத்தால் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா என்பது சந்தேகம். தற்போதைய சூழலில் ஆகஸ்ட் மாதம் தான் தியேட்டர்கள் முழுவீச்சில் இயங்கும் என்கிறார்கள். இந்நிலையில் மக்களுக்கு இப்போது பொழுதுபோக்காக இருப்பது செல்போனும், டிவி, அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள் தான். ஊரடங்கு காலத்தில் இதன் வளர்ச்சி 40 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.




மக்கள் வீட்டை விட்டு வெளிவராமல் இருப்பதால் ஓடிடி தளங்கள் பல அதிரடி ஆபர்களை கொடுத்து மக்களை தங்களது தளங்களில் படம் பார்க்க தூண்டுகிறது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா என்ற அச்சமும் திரையுலகினர் மத்தியில் உள்ளது. அதேசமயம் சில தயாரிப்பாளர்கள் ரிலீஸிற்கு தயாராக உள்ள படத்தை இதிலாவது விற்று போட்ட பணத்தை கொஞ்சமாவது எடுத்து விடலாம் என எண்ணுகின்றனர். ஓடிடி தளங்கள் தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் வரமா... இல்லை சாபமா... என்பதை சில தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்களிடம் கேட்டோம். அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை இங்கு பார்ப்போம்...

தியேட்டர்கள் அழியாது - தயாரிப்பாளர் டி.சிவா
எந்த ஆன்லைன் இணையதளங்களில் படம் வெளிவந்தாலும் இரண்டு, மூன்று படங்களுக்கு மேல் மக்கள் தொடர்ச்சியாக அதில் பார்க்க மாட்டார்கள். கண்வலி வந்துவிடும். தியேட்டர்களில் போய் படம் பார்க்க வருபவர்கள் கண்டிப்பாக வரத்தான் செய்வார்கள். பாப்கான், தியேட்டர்களை எப்போதும் அழிக்கவே முடியாது. உலகம் முழுக்க தியேட்டர்கள் திறக்கப்பட வேண்டும். ஓரிரு இடங்களில் திறப்பதால் எந்த பலனும் இல்லை. பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு வெளிநாடுகளில் பெரிய மார்க்கெட் உள்ளது. இந்த வியாபாரம் பெரியது. உலகளவில் எப்போது இந்த பிரச்னை சரி ஆகுமோ அப்போது தான் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்கள், புதிய படங்களை வெளியிடுவதும் சாத்தியமாகும் என்றார்.




தியேட்டர்களுக்கு மக்கள் வருவது சந்தேகமே - எஸ்.தாணு
கொரோனா ஊரடங்கு பலவகையில் முடக்கத்தை உண்டாக்கி உள்ளது. இதனால் மக்கள் டிவி, அமேசான் போன்றவற்றில் படம் பார்த்து பழகிவிட்டனர். கொரோனா முடிந்தாலும் மக்கள் தியேட்டருக்கு வருவார்களா என்பது சந்தேகமே. பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவந்த பின் மக்கள் தியேட்டர்களுக்கு வரும் நிலையை பொறுத்தே திரைத்துறை தலைநிமிர முடியும். தயாரிப்பாளர்கள் 100 சதவீதம் போட்ட பணத்தை எடுக்க முடியும் என்ற நிலை மாறி 50 சதவீதம் வந்தால் கூட போதும் என்கிற மனநிலையில் தான் உள்ளனர்.

மிகப் பெரிய பொருளாதார சூழலை சந்திக்க வேண்டி உள்ளது. அதனால் இன்னும் 6 மாத காலத்திற்கு பின்பே படங்கள் தயாரிக்கலாமா என்பதை உறுதி செய்ய முடியும். தயாரிப்பாளர்கள் போட்ட பணத்தை திரும்ப எடுப்பது என்பது சிம்ம சொப்பனாக உள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர்கள் ஒற்றுமையோடு இருக்கிறார்கள். இந்த பிரச்னைகளை பற்றி தினமும் பேசி ஒரு சுமூக முடிவு எடுக்கிறார்கள். ஆனால் இங்கோ, தயாரிப்பாளர்களின் நிலை சங்கடமான சூழலில் உள்ளது என்பதே உண்மை என்றார்.


எதிர்காலத்தில் ஓடிடி தான் - ஐசரி கணேஷ்
ஓடிடி தளங்களால் கண்டிப்பாக தியேட்டர்களுக்கு பாதிப்பு வரும். மக்கள் கூட்டம் குறையும். எதிர்காலத்தில் ஓடிடி பிளாட்பார்ம் தான் முதன்மையாக இருக்கும். அதில் மாற்று கருத்து இல்லை. இருப்பினும் ஒரு விஷயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். 30 நாளில் ஓடிடி தளத்தில் படம் போடலாம் என்கிறார்கள். கைதி, பிகில் படங்கள் தியேட்டர்களில் ஓடிக் கொண்டு இருக்கும்போதே இதில் வெளியிட்டார்கள். ஒரு படம் வெளியான 100 நாட்கள் கழித்து டிவியில் ஒளிபரப்புவது போன்று ஓடிடி தளங்களிலும் குறைந்தது 50 நாட்கள் கழித்தே வெளியிட வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். தற்போதை சூழலில் இது போன்ற தளங்களில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. காரணம் மக்களுக்கு வேறு பொழுதுபோக்கு எதுவும் கிடையாது. எங்கள் நிறுவனத்திலேயே மூன்று படங்கள் வெளிவர தயாராக உள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினால் மட்டுமே படம் பார்க்க வருவார்கள் என்றார்.





சின்ன தயாரிப்பாளர்களுக்கு கை கொடுக்கிறது - தயாரிப்பாளர் தேனப்பன்
என்னைக் கேட்டால் இந்த மாதிரி பிளாட்பார்மில் படம் பார்ப்பதால் நிச்சயம் பாதிப்பு வராது. ஏன் என்றால் இதற்கு முன்னாடி டிவிடி, விசிடி, தமிழ் ராக்கர்ஸ்... என பல வகைகளில் இலவசமாக மக்கள் படம் பார்த்துட்டு இருந்தாங்க. சில படங்கள் ரிலீஸ் ஆகும் முன்பே கூட வெளியாகி உள்ளது. அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள் மூலம் பணம் செலுத்தி பார்ப்பதால் தயாரிப்பாளர்களுக்கும் பணம் கிடைக்கிறது. சின்ன படங்களுக்கு இது போன்ற ஓடிடி தளங்கள் பாதுகாப்பு என்றே சொல்லலாம்.

உதாரணத்துக்கு பரியேறும் பெருமாள், மேற்கு தொடர்ச்சி மலை போன்ற படங்களின் சாட்டிலைட் உரிமையை யாரும் வாங்கவில்லை. ஆனால் இந்த நிறுவனங்கள் வாங்கினர். மம்முட்டி நடித்த என்னுடைய பேரன்பு படத்தின் சாட்டிலைட் உரிமை ரூ.30 லட்சத்திற்கு தான் போனது. ஆனால் டிஜிட்டல் உரிமம் ரூ.3 கோடிக்கு போனது. காரணம் அந்த படத்தை சமூகவலைதளங்களில் பாராட்டினார்கள், அதிக ரேட்டிங் கொடுத்தார்கள். இதையும் பார்த்து தான் ஓடிடி தளங்கள் படங்களை வாங்குகின்றனர். எங்களை போன்று படம் எடுப்பவர்களுக்கும், சின்ன படங்களை எடுப்பவர்களுக்கும் அமேசான் போன்ற நிறுவனங்கள் தான் கை கொடுக்கிறது. எல்லாவற்றையும் விட நல்ல படங்கள் கொடுத்தால் முகம் தெரியாத நடிகர்கள் நடித்த மேற்கு தொடர்ச்சி மலை போன்ற படங்களை கூட கண்டிப்பாக அவர்கள் வாங்குவார்கள். ஆகவே முதலில் நல்ல தரமான படங்களை கொடுங்கள் என்றார்.


பாதிப்பு இருக்கும் - தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார்
இப்போது தியேட்டர் திறந்தாலும் மக்கள் வருவார்களா என்பது சந்தேகமே. கொரோனாவால் மக்களுக்குள் ஒரு அச்சம் நிலவுகிறது. இதைவிட திரைத்துறை இப்போது நிறைய சிரமத்தில் இருக்கிறது. புதிதாக கொண்டு வந்த டிடிஎஸ் முறையால் அதிக சிரமம். அதை குறைக்க வழி செய்யணும். புதுப்படம் ரிலீஸ் ஆகி தியேட்டருக்கு மக்கள் வந்து படம் பார்த்து, தயாரிப்பாளர்கள் போட்ட பணத்தை எடுப்பது என்பது சவாலான விஷயம். தற்போதைய சூழலில் 200 படங்கள் வரை ரிலீஸாகமல் உள்ளது. ஓடிடி தளங்களில் மக்கள் படம் பார்த்தால் கண்டிப்பாக எங்களுக்கு பாதிப்பு இருக்கும். எனக்கு தெரிந்தவரை இப்போது ஓடிடி தளங்களில் உள்ள எல்லா படங்களையும் மக்கள் பார்த்துவிட்டார்கள். சில நிறுவனங்கள் மூன்று மாதம் இலவசமாக கூட கொடுத்துள்ளார்கள். அவர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதற்கு கண்டிப்பாக மாற்று வழியை நாம் தேட வேண்டும் என்கிறார்.




தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பில்லை - கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் ராஜேஷ்
ஓடிடி தளங்களால் தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு இருப்பது மாதிரி எனக்கு தெரியவில்லை. கொரோனா பிரச்னை முடிந்த பின் மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும் என்றால் முதலில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவர வேண்டும். மக்கள் அதற்கு எப்படி வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதை பார்த்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கலாம். முதலில் படம் எடுப்பவர்கள் நல்ல கதையை கொடுத்தாலே தானே மக்கள் தியேட்டருக்கு வருவார்கள்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வேண்டுமானால் மக்கள் வீட்டில் இருந்து படம் பார்க்கலாம். இந்த படங்கள் எல்லாமே ஏற்கனவே அவர்கள் வாங்கிய பழைய படங்கள் தான். புதிய படங்கள் எதுவும் இல்லை. ஒருவேளை கொரோனா பிரச்னை தீர்ந்த பின் நிறைய படங்களை ஓடிடி தளங்கள் வாங்கி இருந்தால் அது தியேட்டர்காரர்களுக்கு வேண்டுமானால் பிரச்னையாக இருக்குமே தவிர தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு வராது. எங்களது நிறுவனத்தில் எட்டு படங்கள் ரிலீஸிற்கு தயாராக உள்ளது. அதற்கான வேலையும் நடக்கிறது. கொரோனா பிரச்னை முடிந்தால் மட்டுமே நாங்கள் ரிலீஸ் தொடர்பான அடுத்தகட்டத்திற்கு செல்ல முடியும் என்றார்.


ஹீரோக்களுக்கு மதிப்பு இருக்காது - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற நிறுவனங்கள் தயாரிப்பாளர்களுக்கு ஒரு துணையாக உள்ளது. மற்றபடி மக்கள் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்த்தால் தான் ஹீரோக்களுக்கு மதிப்பு இருக்கும். ஹீரோக்களின் மார்க்கெட்டை ஓடிடி தளங்கள் நிர்ணயிக்காது. கொரோனா முடிந்து எல்லா பிரச்னைகளும் கடந்து போன பின்னர் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்கள் என நம்புகிறேன். இரண்டு, மூன்று பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளி வந்தால் ரசிகர்களுடன் மக்களும் தியேட்டர்களுக்கு வருவார்கள்.

எல்லா படத்தையும் ஆன்லைன் இணையதளங்கள் வாங்குவார்கள் என சொல்ல முடியாது. அதில் அவர்களுக்கு வருமானம் இருக்கணும். எத்தனை பேர் படம் பார்க்கிறார்களோ, அதற்கான தொகை தான் அவர்களுக்கு கிடைக்கும். மக்கள் எதை விரும்புகிறார்களோ அதற்கு தகுந்தபடி படம் எடுப்பவர்கள் நல்ல படமாக கொடுத்தால் மக்களும் ரசிப்பார்கள். என்னுடைய மாநாடு படம் 20 சதவீதம் முடிந்துள்ளது. கொரோனா ஊரடங்கு முடிந்த பின் அடுத்த வேலை தொடரும் என்றார்.


நடுத்தர மக்கள் தியேட்டருக்கு வர மாட்டார்கள் - சித்திரம் பேசுதடி ஸ்ரீகாந்த்
எதிர்காலத்தில் படம் பார்ப்பது டிஜிட்டல் தளத்தில் தான் இருக்கும். இனி தியேட்டர்களுக்கு பணக்காரர்கள் மட்டுமே வந்து படம் பார்ப்பார்கள். நடுத்தர வர்க்கத்தினர் பெரிய தொகை கொடுத்து தியேட்டருக்கு வந்து படம் பார்க்க மாட்டார்கள். அதற்கு பதிலாக டிஜிட்டலில் தான் படம் பார்ப்பார்கள். எங்களது தயாரிப்பாளர்களிடம் நான் பேசும்போது கூட, ஏன் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஒரு ஓடிடி பிளாட்பார்ம் ஆரம்பிக்க கூடாது என்று. அப்படி செய்தால் தியேட்டர்கள் கிடைக்காத சிறு படங்கள் தங்களது படங்களை இதில் வெளியிட உதவும். இந்த கொரோனா எங்களை இந்த விஷயத்தில் இப்போது வேகமெடுக்க வைத்துள்ளது என்றார்.




28நாட்கள் கழித்து வெளியிட்டால் பாதிப்பில்லை - கமலா தியேட்டர் உரிமையாளர் கணேஷ் சிதம்பரம்
இப்போதெல்லாம் ஒரு படம் 21 நாள் ஓடினால் பெரிய விஷயம். அதுவே 28 நாள் ஓடினால் சூப்பரான படம். இன்றைக்கு ரஜினி, விஜய், அஜித் படங்களே அதிகபட்சமாக 30 நாட்கள் கூட தாண்டுவதில்லை. சில படங்கள் 3 நாள், இன்னும் சில படங்கள் 3 காட்சி கூட தாண்டுவதில்லை என்ற நிலை தான் உள்ளது. என் தியேட்டரில் 2 ஸ்கிரீன் உள்ளது. அதனால் அடுத்தடுத்து புதுப்படங்கள் வர வர மாத்திவிடுவோம். ஆனால் 7, 8 ஸ்கிரீன் வைத்துள்ளவர்கள் என்ன தான் புதுப்படங்களை வாங்கி வெளியிட்டாலும் ஒன்றிரண்டு ஸ்கிரீன்களில் பழைய படங்கள் ஓடிக் கொண்டு தான் இருக்கும். அவர்களுக்கு வசூல் பாதிக்கும். அதனால் ஓடிடி தளங்களில் படங்களை 28 நாட்கள் கழித்து வெளியிட்டால் யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது.

கொரோனாவால் தியேட்டர்களை எலிகளிடமிருந்து பாதுகாப்பது பெரும் சிரமமாக உள்ளது. இதனாலேயே எங்கள் தியேட்டர்களில் ஒளி விளக்குகளை அணைப்பதே இல்லை. கொரோனால் இந்த உலகத்திலேயே பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு இடம் என்றால் அது தியேட்டர்கள் தான். இப்படி சொல்ல நான் மிகவும் வருத்தப்படுகிறேன். சினிமா தியேட்டர் ஓடினால் எனக்கு காசு வரும் ஆனால் மக்கள் நன்றாக இருந்தால் தான் நான் நன்றாக இருக்க முடியும். கொரோனா தாக்கத்திலிருந்து முற்றிலும் வெளியே வர சில காலம் ஆகும் என நினைக்கிறேன் என்றார்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
பிப்ரவரி 2020 படங்கள் ஓர் பார்வை - சிறிய படங்களின் வெற்றிபிப்ரவரி 2020 படங்கள் ஓர் பார்வை - சிறிய ... மார்ச் மாதப் படங்கள் : பாதியில் முடிந்த வெளியீடுகள் மார்ச் மாதப் படங்கள் : பாதியில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

S. Narayanan - Chennai,இந்தியா
15 ஏப், 2020 - 12:43 Report Abuse
S. Narayanan நடுத்தர வர்க்கத்தில் இருபது முதல் நாற்பது வயது மக்கள் மட்டும் தான் திரை அரங்குகளை நாடி வருவார்கள். இப்போது பொருளாதார பிரச்சனையால் ஒரு வருடத்திற்கு எதுவும் சொல்ல முடியாது.
Rate this:
M.P.Madasamy - Trivandrum,இந்தியா
15 ஏப், 2020 - 11:38 Report Abuse
M.P.Madasamy நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வெளிவந்தால் ஓ டி டி ஆதிக்கத்தையும் மீறி தியேட்டருக்கு மக்கள் வருவார்கள்.
Rate this:
15 ஏப், 2020 - 10:18 Report Abuse
சேரன் செங்குட்டுவன் நான் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்த்து ஒரு 5 வருடங்களாவதிருக்கும். பொதுவாக நான் இப்போது தமிழ்ப் படங்கள் பார்ப்பதில்லை. உண்மைச் சம்பவங்களின் அடிப்படியில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படைகள் பெரும்பாலும் பார்க்கிறேன். ஹோம் சினிமா ப்ரொஜெக்டர் மற்றும் சவுண்ட் சிஸ்டம் வைத்திருக்கிறேன். நெட்டபிலிஸ், ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் ஆகியவற்றில் ஏராளமான படங்கள் இருக்கின்றன. ஆப்பிள் ஐடியூன்ஸ் மற்றும் யூடியூபில் ஒரு சில படங்கள் பார்ப்பேன். இவற்றில் படங்களை வாங்கிக்கொள்ளலாம் அல்லது வாடகைக்கு வாங்கிப் பார்க்கலாம். இப்போது வரும் குப்பைத் தமிழ் படங்கள் பார்க்கத் திரையரங்குகளுக்குச் சென்றால் கிடைப்பது வெறும் கால மற்றும் பொருள் விரயம் மட்டுமே.
Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
15 ஏப், 2020 - 09:51 Report Abuse
Indhuindian சினிமா அஷிந்தால்தான் தமிஷ் நாட்டுக்கு சினிமா மோகம் அஷியும் மாநிலம் உருப்படும்
Rate this:
murugesh - san diego,யூ.எஸ்.ஏ
15 ஏப், 2020 - 01:28 Report Abuse
murugesh You can payperview online streaming media, charge $10 for each view, atleast in the lockdown , if 1 lakh people watch the movie, you will get 1lakh dollar = 70 100000 = 7Crore .. it's minimum estimate, in this lock down, tamil movie fans from all over the world will support ...
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in